பக்கம் எண் :

காட்சிப் படலம்323

என்றாலும்; இற்றைஇப்பகலில் - இன்றைய தினத்தில் இந்த முகூர்த்தத்தில்;
நொய்தின் - எளிதாக; இருவரை - இராமலக்குவரை; ஒரு கையாலே - ஒரு
கையாலே; பற்றினென் கொணருந்தன்மை - பிடித்துக் கொண்டு வரும் என்
வலிமையை; காணுதி - பார்ப்பாயாக.

     மனிதரோடு முனிவுஎன்கண் விளையாது என்று சேர்க்க. பகல் -
முகூர்த்தம். பிறன் பழிப்பது இல்லாயின் நன்று - என்று குறள் (49) பேசிற்று.
இராவணனே பிராட்டியைப் பழிப்பிலாதாய், என்றான். இராவணன், தன்னை
மனிதனாக நினைந்ததே இல்லை. மனித குலத்தினும் மேம்பட்டது தன்குலம்
என்று பேசுவதை யாண்டும் காணலாம்.                           (147)

5216.

‘பதவிய மனிதரேனும், பைந்தொடி ! நின்னைத் தந்த
உதவியை உணரநோக்கின், உயிர்க் கொலைக்கு
                           உரியர் அல்லர்;
சிதைவுறல் அவர்க்கு வேண்டின், செய் திறன்
                          தேர்ந்தது எண்ணின்,
இதன் நினக்குஈதேஆகின், இயற்றுவல்; காண்டி !
                          இன்னும்,

     பைந்தொடி -பசியவளையல் அணிந்தவளே; (இராமலக்குவர்கள்)
பதவு இயல் - புல்லின் இயல்பைப் பெற்ற; மனிதரேனும் - மனிதராக
இருந்தாலும்; நின்னைத் தந்த - உன்னை எனக்குத் கொடுத்த; உதவியை -
உபகாரத்தை; உணர நோக்கின் - சிந்தித்துப் பார்த்தால்; (அவர்கள்) உயிர்க்
கொலைக்கு உரியர் அல்லர் -
உயிரைக் கொல்வதற்குத் தக்கவராகார்;
அவர்க்கு - அந்த இராமலக்குவர்க்கு; சிதைவு உறல் வேண்டின் - அழிவு
வருதலை நீ விரும்பினால்; செய்திறன் - யான் செய்யும் உபாயம்; நேர்ந்தது
எண்ணின் -
உன்னால் ஏற்றுக்கொள்ளப்பட்டால்; நினக்கு - உனக்கு; ஈதே
இதன் -
இச்செயல் (கொல்லுதல்) நன்மை; ஆகின் - ஆனால்; (அச்
செயலை) இன்னும் - இப்போதே; இயற்றுவன் - செய்வேன்.

     புல் போன்ற மனிதர்கள்; அவர்களைக் கொல்வது எளிது. என்றாலும்
நன்றியால் கொல்லேன் என்பது இராவணன் பண்பு. பதவு + இயல் - பதவியல்
- பதவு - புல் நல்வேறு செங்கோற் பதவின் வார் குரல் கறிக்கும்
(குறுந்தொகை 363) இராமலக்குவர்களை, முன்பாட்டில்