| புண்ணில்கோல் இட்டாலன சொல்லி; பொது நோக்காது எண்ணிக்காணாய், மெய்ம்மையும்’ என்றார், சிலர் எல்லாம். |
சிலர் எல்லாம்- வேறுசில அரக்கிமார்கள்; பெண்ணில் தீயோய் - பெண்களுக்குள் தீயவளே; புண்ணில் கோலிட்டாலன - புண்ணிலே அம்பை ஏவினாற்போல; சொல்லி - கொடிய வார்த்தைகளைப் பேசி; நின்முதல் - உன் காரணமாக; தீய மானுயர் - தீய இராமலக்குவர்கள்; தத்தம் வழியோடும் - தங்கள் தங்கள் மரபுடன்; மண்ணில் - பூமியில்; மாயும் பிணிசெய்தாய் - அழிவதற்கு ஏதுவான நோயை உண்டு பண்ணினாய்; பொதுநோக்காது - எல்லோரையும் சமமாகப் பாராமல்; எண்ணி - (சிறப்புற)ஆராய்ந்து; மெய்ம்மையை - உண்மையை; காணாய் - பார்ப்பாயாக;என்றார் - என்று கூறினர். வழி - மரபு.முதல் - காரணம். எண்ணில் காணாய் - என்று பாடங்கொண்டு பொது நோக்காது எண்ணில் மெய்ம்மை காணாய் என்று கூட்டி, பொதுவாகப் பாராமல் எண்ணினால் மெய்ம்மையைக் காணமாட்டாய் என்று உரை கூறினும் ஏற்கும் - பாரபட்சம் பாராதே என்றுஅறிவுறுத்துகிறார்கள். (155) 5224. | ‘புக்க வழிக்கும், போந்த வழிக்கும், புகை வெந் தீ ஒக்கவிதைப்பான் உற்றனை அன்றோ ? உணர்வு இல்லாய் ! இக் கணம்இற்றாய்; உன் இனம் எல்லாம் இனி வாழா; சிக்க உரைத்தேம்’ என்று தெழித்தார், சிலர் எல்லாம். |
சிலர் எல்லாம்- வேறுசில அரக்கிமார்கள்; உணர்வு இல்லாய் - அறிவற்றவளே (நீ); புக்க வழிக்கும் - புகுந்த கணவன் மரபுக்கும்; போந்த வழிக்கும் - பிறந்த தந்தை மரபுக்கும்; புகை வெந்தீ - புகையுடன் கூடிய நெருப்பை; ஒக்க - ஒருசேர ; விதைப்பான் உற்றனை அன்றோ - அள்ளித் தெளிக்க வந்துள்ளாய் அல்லவா; இக்கணம் இற்றாய் - நீ இப்பொழுதே அழிந்தாய்; உன் இனம் எல்லாம் - உன் கூட்டம் முழுவதும்; இனி வாழா - இனிமேல் வாழப்போவதில்லை; சிக்க உரைத்தேம் - உறுதியாகச் சொன்னோம்; என்று தெழித்தார் - என்று கூறி அதட்டினர். |