| மன் உயிர்காத்து, இருங் காலம் வைகினேன்; என்னின், வேறுஅரக்கியர், யாண்டையார்கொலோ ? |
பிறர் - அயலவர்;உன்னினர் - என்னை நினைத்து விட்டார்; என உணர்ந்தும் - என்று அறிந்தும்; உய்ந்து - (அதனால் இறவாமல்) பிழைத்து; அவர் சொன்னன சொன்னன - அயலவர் கூறிய இழிமொழிகள்; செவியில் தூங்கவும் - செவியிலே தங்கியிருக்கவும்; மன்உயிர் காத்து - நிலைபெற்ற உயிரைப் பாதுகாத்து; இருங்காலம் - நீண்ட காலம்; வைகினேன் - சிறையி்ல் தங்கினேன்; என்னின் - என்னைப் போல; வேறு - மாறுபட்ட; அரக்கியர் -அரக்கிகள்; யாண்டையார் - எவ்விடத்துள்ளனர் ? தினைத் துணையாம்பழியும் சான்றோர்க்குப் பனைத் துணையாகும். ஆதலின் பிராட்டி இராவணன் தன்னை நினைக்க நேர்ந்தது குறித்து வருந்துகிறாள். பிறர் நெஞ்சு புகுதல் பத்தினிப் பெண்டிர்க்குத் தகாது என்று பேசியது வேறு. இவர்கள் புகக் கூடாது. பிறர் நினைப்பதால் பழிவரும் என்பது பிழை. யான் பிறர் கருதியும் உயிருடன் வாழ்கிறேன். யானே அரக்கி என்று பிராட்டி நினைக்கிறாள். கொல், ஓ - அசைகள். (12) 5240. | ‘சொல்பிரியாப் பழி சுமந்து தூங்குவேன்; நல் பிறப்புஉடைமையும் நாணும் நன்றுஅரோ ! கற்புடைமடந்தையர், கதையுளோர்கள்தாம், இல் பிரிந்துஉய்ந்தவர் யாவர் யான் அலால் ? |
பழிபிரியாச்சொல் - நிந்தையிலிருந்து விலகாத சொற்களை; சுமந்து -தாங்கி; தூங்குவென் - கவலையற்றிருக்கும் என்னுடைய; நல் - நல்ல;பிறப்புஉடைமையும் - சிறந்த குடிப்பிறப்பாகிய செல்வமும்; நாணும் - நாணமும்;நன்று - மிகமிக நன்றாக உள்ளது; கற்புடை மடந்தையர் - கற்புடையபெண்களிலும்; கதை உளோர்கள் - வரலாற்றில் பேசப்படுபவர்களிலும்;இல்பிரிந்து - கணவனைப் பிரிந்து; உய்ந்தவர் - உயிருடன் வாழ்பவர்; யான்அலால் - என்னைத் தவிர; யாவர் - வேறு எவர் உள்ளனர். வாழும் பெண்கள்வரலாற்றுப் பெண்கள், கணவனைப் பிரிந்ததும் இறந்தனர். என்னைப் போல் எவர் உயிருடன் வாழ்ந்தனர். இல் - கணவன். புதுவழக்கு - இல்லாள் என்பதே மரபு. ஆனால் இல்லான் என்று சேக்கிழார் பேசினார் (காரைக்கால்) கவிச்சக்கரவர்த்தியும் அம்மரபைப் பேசுகின்றார் போலும். தாம் - உரை அசை. |