கதையுளோர்கள் கற்புடைமடந்தையர் என்று கூட்டிக் கதையிலே பேசப்படும் கற்புடைப் பெண்கள் என்று பொருள் கூறப்பெற்றது. கதையின் போக்கை ஆராய்ந்து முடிவு காணுதல் முறை. நன்று - இகழ்ச்சி. அரோ - அசை. (13) 5241. | ‘ “பிறர்மனை எய்திய பெண்ணைப் பேணுதல் திறன் அலது”என்று, உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன்; புறன் அலர்,அவன் உற, போது போக்கி, யான், அறன் அலதுஇயற்றி, வேறு என் கொண்டு ஆற்றுகேன் ? |
பிறர்மனைஎய்திய - அயலவர் வீட்டைஅடைந்த; பெண்ணைப் பேணுதல் - பெண்ணை விரும்புதல்; திறன் அலது என்று - ஒழுக்கம் அற்ற செயல் என்று; உயிர்க்கு இறைவன் - என் உயிரின் தலைவனான இராமபிரான்; தீர்ந்தனன் - என்னைக் கைவிட்டு விட்டான்; புறன் - வெளி உலகில்; அவன் அலர் உற - அந்த இராமபிரான் பழிச்சொல் பெற; அறன் அலது இயற்றி - இல்லற நெறிக்கு மாறுபட்டதைச் செய்து; போது போக்கி - (இறவாமல்) காலத்தைக் கழித்து (வாழும்); யான் - நான்; வேறு - தனியாக; என் கொண்டு - எதை ஆதாரமாகக் கொண்டு; ஆற்றுகேன் - உயிரை வைத்திருப்பேன். திறம் -ஒழுக்கம், மேன்மை, புகழ் என்னும் பொருள் தரும். அனைத்தும் ஈண்டு ஏற்கும். தீர்தல் - கைவிடுதல். போது போக்குதல் - குறிக்கோளின்றி இருத்தல். ‘பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்’ என்பர் நாவேந்தர். ஆற்றுதல் - பிழைத்தல் (உய்தல்) ஆற்றுதல், வலிதல், உய்தல் ஆகும் (பிங்கலம் 1828) (14) 5242. | ‘எப் பொழுது, இப் பெரும் பழியின் எய்தினேன், அப் பொழுதே,உயிர் துறக்கும் ஆணையேன்; ஒப்பு அரும் பெருமறு உலகம் ஓத, யான், துப்பு அழிந்துஉய்வது, துறக்கம் துன்னவோ ? |
இப்பெரும்பழி -இந்தப்பெரிய பழியை; எப்பொழுது எய்தினேன் - எப்போது அடைந்தேனோ; அப்பொழுது - அந்தச் சமயத்திலேயே; உயிர்துறக்கும் - உயிரை விட்டு விடும்; ஆணையேன் - ஆன்றோர் மரபை உடைய யான்; உலகம் - உலக மக்கள்; ஒப்பரும் பெருமறு - ஒப்பற்ற பெரிய நிந்தையை; ஓத - |