பக்கம் எண் :

344சுந்தர காண்டம்

     வஞ்சனைமானின் பின் - பொய் மானுக்குப் பின்னே; மன்னைப்
போக்கி -
தலைவனான இராமபிரானை அனுப்பிவிட்டு; என் மஞ்சனை -
என் மகனான இலக்குவனை; வழிக்கொள்வாய் என - இராமனைத் தேடிச்
செல்க என்று; பின்வைது - பிறகு இழித்துப்பேசி; நஞ்சு அனையான் -
விடம் போன்ற இராவணனின்; அகம் புகுந்த - வீட்டை அடைந்த; நங்கை
யான் -
பெண்ணாகிய யான்; உய்ஞ்சனென் - உயிர் பிழைத்து; இருத்தலும்
-
(இறவாமல்) இருப்பதை; உலகம் கொள்ளுமோ - உலகம் ஏற்றுக்
கொள்ளுமா.

     இயல்பாகநிகழ்ந்த நிகழ்ச்சியை உள்நோக்கம் உடையதாகப் பேசுவது
உலக மரபு. மானின்பின் இராமனைப் போக்கியது, இலக்குவனை அனுப்பியது
யாவும் சந்தர்ப்பத்தால் நேர்ந்தது. தான் செய்யாத குற்றத்தைச் செய்ததாகப்
பிராட்டி கருதுகிறாள். இலக்குவன் பால் கொண்ட பாசம் மஞ்சன் என்பதால்
புலனாகிறது மஞ்சன் - மகன். சுமித்திரை, சீதையைத் தாயாகக் கருதச்
சொன்னது பிராட்டியின் நினைவில் உள்ளது. உயிர்த் தாயர்.... பூங்குழற் சீதை
என்று அவள் பேசினாள் இங்கு உலகம் என்றது சான்றோரை. வஞ்சனைமான்
- பொய்மான். மாயையும் பெண்ணும் பொய்யும் வஞ்சனை (பிங்கலம் 4014)
வஞ்சகமுடைய மான் என்றும் கூறலாம்.                           (17)

5245.

‘வல் இயல்மறவர், தம் வடுவின் தீர்பவர்,
வெல்லினும்வெல்க, போர்; விளிந்து வீடுக;
இல் இயல்அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின்,
சொல்லிய என்பழி அவரைச் சுற்றுமோ ?

     வல்இயல் மறவர்- வலியஇயல்பை உடைய இராமலக்குவர்கள்; தம் -
தம்முடைய; வடுலின் தீர்பவர் - பழிக்குற்றத்திலிருந்து நீங்குபவராய்ப்;
போர்வெல்லினும் வெல்லுக - போரில் வென்றாலும் வெற்றியடையட்டும்;
(அல்லது)விளிந்து வீடுக - இறந்து அழியட்டும்;  (மகிழ்ச்சியோ துன்பமோ
அடையேன்) யான் - நான்; இல் இயல் அறத்தை - இல்லறத்திற்கு அமைந்
ததர்மத்தை; இறந்து வாழ்ந்தபின் - கடந்து வாழ்ந்த பிறகு;
சொல்லிய என்பழி- உலகம் தூற்றிய எனக்குரிய நிந்தைகள்; அவரைச்
சுற்றுமோ -
இராமலக்குவர்களைச் சூழுமோ ?.

     யான் அறங்கடவாதுஇருப்பின் என்னை மீட்காத பழி அவரைச் சாரும்
யான் அறங் கடந்ததால் என்பழி அவரைச் சாரா, என்றாள் பிராட்டி அறம்
கடவாது இருந்தும் மனம் நொந்து இங்ஙனம் பேசினாள்.