பக்கம் எண் :

உருக் காட்டு படலம்345

யான் இறப்பதால்அவர்க்குப் பழிவரின் இறப்பது தீது. பழிவராமையால்
இறப்பது நன்று என்று கருதுகிறாள். என் பழி - எனக்குரிய பழி.     (18)

5246.

‘வருந்தல்இல் மானம், மா அனைய மாட்சியர்
பெருந் தவம்மடந்தையர் முன்பு, பேதையேன்,
“கருந் தனிமுகிலினைப் பிரிந்து, கள்வர் ஊர்
இருந்தவள்,இவள்” என, ஏச நிற்பெனோ ?

     வருந்தல்இல் -(உயிரைவிட) துன்பம் அடையாத; மானம் மா அனைய- மானமுடைமையின்கண் கவரிமானைப் போன்ற; மாட்சியர் -
சிறப்பைப்பெற்ற; பெருந்தவ மடந்தையர் முன்பு - பெருந்தவமுடைய
மகளிருக்குமுன்னர்; பேதையேன் - அறிவற்ற யான்; கருந்தனி முகிலினை
-
கரியஒப்பற்ற மேகம் போல்பவனை; பிரிந்து - பிரிந்து; இவள் - இநத்ச்
சீதை;கள்வர் ஊர் இருந்தவள் - கள்வர்கள் வாழும் இலங்கையில்
வாழ்ந்தவள்;என - என்று; ஏச நிற்பெனோ - பழித்துப்பேச அதுகேட்டு
இருப்பேனோ ?

     சிறுமயிர்நீப்பினும் வாழாத  கவரிமான்போல் சிறு பழிச் சொல்லும்
பொறாது பலர் இறப்பர். அவர்கள் முன் யான் பிறர் பழிக்க வாழேன்
என்றாள். மயிர்நீப்பின் வாழாக்கவரிமா.. என்று பேசியது தமிழ் மறை
(குறள்.969)                                            (19)

5247.

‘அற்புதன், அரக்கர்தம் வருக்கம் ஆசு அற,
வில் பணிகொண்டு, அருஞ் சிறையின் மீட்ட நாள்,
“இல் புகத் தக்கலை” என்னில், யானுடைக்
கற்பினை, எப்பரிசு இழைத்துக் காட்டுகேன் ?

     அற்புதன் -அதிசயப்பண்புற்ற இராமபிரான்; அரக்கர் தம் வருக்கம்
-
அரக்கர்களின் குலம்; ஆசு அற - பற்றுக்கோடு இல்லாமல்; வில் பணி
கொண்டு -
வில்லை ஏவல் கொண்டு; அருஞ்சிறையின் - கொடிய
சிறையிலிருந்து; மீட்ட நாள் - மீட்கும் காலத்தில்; இல்புகத் தக்கலை
அல்லை -
என் வீட்டில் நுழையத் தகுதியுடையை அல்லை என்று; என்னில்
-
என்று கூறினால்; யானுடைக் கற்பினை - யான் கொண்டுள்ள கற்பை;
எப்பரிசு - எந்த வகையால்; இழைத்துக் காட்டுகேன் - நிரூபித்துக்
காண்பிப்பேன்.

     ஆசு - பற்றுக்கோடு. குற்றம் என்றும் கூறலாம். பணி கொண்டு - ஏவல்
கொண்டால். ‘பாவியேனைப் பணி கொண்டாய்’ என்பர்