பக்கம் எண் :

346சுந்தர காண்டம்

மணிவாசகர்.“வானவரைப் பணிகொண்ட மருகாவோ” என்பாள் (கம்ப. 2842.)
சூர்ப்பணகை - இராமன் வில்லின் பணி கொண்டான் இழைத்தல் - நிரூபித்தல்,
பரிசு - தன்மை, மீட்ட நாள் - கால மயக்கு, எதிர்காலம் இறந்தகாலமாகப்
பேசப்பட்டது. தக்கலை - முன்னிலை ஒருமை எதிர்மறை வினைமுற்று.  (20)

சீதை மாதவிப்பொதும்பர் அடைதல்.
அனுமன் தோன்றுதல் 

5248.

‘ஆதலான், இறத்தலே அறத்தின் ஆறு’ எனா,
‘சாதல்காப்பவரும் என் தவத்தின் சாம்பினார்;
ஈது அலாது இடமும்வேறு இல்லை’ என்று, ஒரு
போது உலாம்மாதவிப் பொதும்பர் எய்தினாள்.

(பிராட்டி)

     ஆதலான் -ஆகையினாலே; இறத்தலே - யான் இறப்பது தான்;
அறத்தின் ஆறு - அறத்தினால் காட்டப் பெற்ற வழியாகும்; எனா - என்று
உறுதிப்படுத்திக் கொண்டு; சாதல் காப்பவரும் - யான் இறப்பதைத்
தடுப்பவரும்; என் தவத்தின் - என்னுடைய தவத்தினாலே; சாம்பினார் -
மயங்கியுள்ளனர்; ஈது அலாது - இந்தச் சமயம் தவிர; வேறு இடமும்
இல்லை -
வேறு சந்தர்ப்பம் இல்லை; என்று - என்று தனக்குள்
கூறிக்கொண்டு; உலாம் - சூழ்ந்துள்ள; போது - மலர்களைப் பெற்ற; ஒரு
மாதவிப் பொதும்பர் -
ஒரு குருக்கத்திச் சோலையை; எய்தினாள் -
அடைந்தாள்.

     ‘ஆதலால்’ என்னும் முடிபுநிலைச்சொல் மேலே போந்த (11-20) பத்துப்
பாடலை நோக்க நின்றது. அப்பாடல்களில் இறப்பது நன்று’ என்னும்
முடிவுக்குக் காரணங்கள் நினைக்கப்பெற்றன. போது உலாம் - மலர் சூழ்ந்த.
‘தூசு உலாய்க் கிடந்த அல்குல்’ (சிந்தாமணி 550) அங்கு இனியர் உலாய் -
சூழ்ந்து என்று குறித்தார்.                                     (21)

5249.

கண்டனன்அனுமனும்; கருத்தும் எண்ணினான்;
கொண்டனன்துணுக்கம்; மெய் தீண்டக் கூசுவான்,
‘அண்டர் நாயகன்அருள் தூதன் யான்’ எனா,
தொண்டை வாய்மயிலினைத் தொழுது,
                              தோன்றினான்.

     அனுமன் கண்டனன்- அனுமன்பிராட்டியைப் பார்த்தான்; கருத்தும்
எண்ணினான் -
பிராட்டியின் நினைவை ஆராய்ந்து;