பக்கம் எண் :

348சுந்தர காண்டம்

குடைதல் - துருவுதல்.தேடும் பொருள் பூமியில் இலை எனின் உலகைத்
தோண்டிப் பார்ப்பர். அது சகரர் வரலாற்றில் அறிக.               (23)

5251.

‘ஈண்டு நீஇருந்ததை, இடரின் வைகுறும்
ஆண்தகைஅறிந்திலன்; அதற்குக் காரணம்
வேண்டுமே ?அரக்கர்தம் வருக்கம் வேரொடு
மாண்டில; ஈதுஅலால், மாறு வேறு உண்டோ ?

     நீ ஈண்டுஇருந்ததை - நீ இங்கே இருப்பதை;இடரின் வைகுறும் -
துன்பத்தில் கிடக்கின்ற; ஆண்டகை அறிந்திலன் - இராமபிரான் அறிந்தான்
இல்லை; அதற்கு - அறிந்திலன் என்பதற்கு; காரணம் வேண்டுமே ? -
காரணத்தைக் கூறவேண்டுமல்லவா; அரக்கர் தம் வருக்கம் - அரக்கர்களின்
கூட்டம்; வேரொடு மாண்டில - அடியுடன் அழியவில்லை; ஈது அலால் -
இதைத்தவிர; மாறு வேறு - மாறுபட்ட காரணம்; உண்டோ - உள்ளதோ.

     அரக்கர்கள்அழியாமையால் இராமன் உன் செய்தியை அறிந்திலன்
என்று அறிய வேண்டும். இப்பாடல், அறியாமைக்குக் காரணம் பேசாமல்
அறிந்திலன் என்பதற்குக் காரணம் கூறுகிறது. காரணம் என்றது அனுமான
உறுப்பாகிய ஏதுவை. புகையாகிய காரணத்தால் நெருப்பை அறிகிறோம்.
அரக்கர்கள் அழியாத காரணத்தால் அவன் சீதை நிலை அறிந்திலன் என்பதை
அறிக.                                                  (24)

5252.

‘ஐயுறல்; உளது அடையாளம்;ஆரியன்
மெய் உறஉணர்த்திய உரையும் வேறு உள;
கை உறுநெல்லியங் கனியின் காண்டியால்;
நெய் உறு விளக்குஅனாய் ! நினையல் வேறு’
                                  என்றான்.

     நெய் உறு விளக்குஅனாய் ! - நெய் நிறைந்தவிளக்கைப்
போன்றவளே; ஐயுறல் - சந்தேகம் கொள்ளாதே; அடையாளம் உளது -
அடையாளப் பொருள் உள்ளது; ஆரியன் - இராமபிரான்; மெய் உற
உணர்த்திய உரையும் -
உண்மையுடன் அறிவுறுத்தியசொற்களும்; வேறு
உள -
தனியாக உள்ளன; கைஉறு -கையிலே உள்ள; நெல்லியங்கனியின்
-
நெல்லிக் கனியைப் போல; காண்டி- பார்; வேறு நினையல் - என்னை
அயலாகக் கருதாதே; என்றான் -என்றான்.