அடையாளம்,இராமபிரான் வழங்கிய கணையாழி. என்னை அயலாகக் கருதாதே. நெய்விளக்கு, பிராட்டியின் தூய்மையை உணர்த்துகிறது. பிராட்டி, மாயமானால் ஏமாற்றப்பட்டதிலிருந்து எதையும் நம்பாள். இராவணன் துறவு வேடம் கண்டபின் எவரையும் நம்பாள். ஆகையால் ஐயுறல் என்றும் வேறு நினையல் என்றும் அனுமன் பேசினான். என்னை அருள் தூதனாக எண்ணுக. பகையாகக் கருதேல். விளக்கு உண்மைப் பொருளைக் காண்பிக்கும். பிறர்க்கு உணர்த்த வேண்டிய உனக்கு யான் உணர்த்த வேண்டுமா என்பது குறிப்பு. நெல்லி அங்கனி - அம் சாரியை. ஐயுறல், நினையல் - எதிர்மறை ஏவல் வினைமுற்று. (25) அறுசீர்விருத்தம் | 5253. | என்று அவன்இறைஞ்ச நோக்கி, இரக்கமும் முனிவும் எய்தி, ‘நின்றவன்நிருதன் அல்லன்; நெறி நின்று, பொறிகள் ஐந்தும் வென்றவன்;அல்லனாகில், விண்ணவன் ஆக வேண்டும்; நன்று உணர்வுஉரையன்; தூயன்; நவை இலன் போலும்!’ என்னா, |
என்று அவன்இறைஞ்ச - என்று கூறி அனுமன்வணங்கி நிற்க; நோக்கி - அவனைப் பார்த்து (பிராட்டி); இரக்கமும் முனிவும் எய்தி - இரக்கத்தையும் கோபத்தையும் ஒருங்கே அடைந்து; நின்றவன் - எதிரே நிற்கும் இவன்; நிருதன் அல்லன் - அரக்கன் அல்லன்; நெறி நின்று - நல்ல ஒழுக்கத்திலே நிலைத்திருந்து; பொறிகள் ஐந்தும் - ஐந்து பொறிகளையும்; வென்றவன் - வென்றமுனிவன் ஆவான்; அல்லன் ஆகில் - முனிவன் அல்லன் என்றால்; விண்ணவன் ஆதல் வேண்டும் - தேவனாக இருக்க வேண்டும்; உணர்வு நன்று உரையன் - அறிவு நன்றாக உள்ள பேச்சினன்; தூயன் - தூய்மையானவன்; நவை இலன் போலும் - குற்றம் அற்றவன் போலும்; என்னா - என்று அறிந்து. பிராட்டிக்குமுதலில் இரக்கமும் முனிவும் வந்தன. ஆனால் முனிவு மறைந்து விட்டது. இங்ஙனம் தோன்றி மறையும் உணர்வுகள் பல. முனிவு என்பதற்கு வருத்தம் என்னும் பொருள் கொள்ளலாம். முனிவு இகந்திருந்த முதுவாயிரவல’ என்னும் (சிறுபாண் 40) பகுதியைப் பார்க்கவும். முனிவு, வருத்தம் என்று பேசப்பட்டது. பிராட்டி, |