அனுமனைப் புலன்கள்வென்றவன் என்றும் தேவன் என்றும் பேசியது அனுமனின் பெருமைக்குச் சிறந்த சான்று. அனுமன் சிறப்பை இராமன் பேசியதை இங்கே கருதுக. அவன் அனுமனின் விசுவருபம் கண்டபின் புகழ்ந்தான். பிராட்டியோ இயல்பான நிலையில் அனுமனை அறிந்து புகழ்ந்தாள். இராமன் ‘மறைகளாலும், ஞானத்தாலும் கோட்படாப்பதம்’ (கம்ப. 3783.) என்றான். விண்ணவன் என்றாள் பிராட்டி, விண்ணவன் என்பது தேவன் என்னும் இயல்பான பொருளும், விண் போன்று ஞானத்தால் அறியமுடியாத நுட்பமானவன் என்னும் ஆழ்ந்த பொருளும் கொண்டுள்ளது. பெருமான், அனுமனின் சொல்லைச் சிறப்பித்து விரிவாகப் பேசினான். இங்கே பிராட்டி‘உரையும் தூயன்’ என்றாள். பெருமான் அனுமனை, நவைபடா ஞானத்தாலும் அறியப்படாதவன் என்றான் - பிராட்டி ‘நவை இலன்’ என்று பேசினாள். நெறி - ஒழுக்கம். பொறிகளை வெல்ல நெறியில் நிற்றல் வேண்டும். பொறிகளை வென்றவன் தேவன் என்பது குறிப்பு. போலும் என்பது அசை. இச்சொல் உறுதிப்படுத்தவியலாத இலேசான ஐயத்தையும் உணர்த்தும். வந்தாய் போல வாராதாய் என்னும் தொடர் கொண்டு அறிக. இதுவும் அடுத்த பாடல்களும் குளகம் (26-27-28) (26) | 5254. | ‘அரக்கனேஆக; வேறு ஓர் அமரனே ஆக; அன்றிக் குரக்கு இனத்துஒருவனேதான் ஆகுக; கொடுமை ஆக; இரக்கமே ஆக;வந்து, இங்கு, எம்பிரான் நாமம் சொல்லி, உருக்கினன்உணர்வை; தந்தான் உயிர்; இதின் உதவி உண்டோ ?’ |
(இவன்) அரக்கனே ஆக- அரக்கனாகவே இருக்கட்டும் (அல்லது); வேறு ஓர் - அரக்கரினும் வேறுபட்ட ஒப்பற்ற; அமரனே ஆக - தேவனாகவே இருக்கட்டும்; அன்றி - அல்லாமல்; குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக - குரக்கு இனத்தைச் சார்ந்த ஒருவனாகவே இருக்கட்டும்; (இவன் பண்பு) கொடுமை ஆக - கொடுமை உடையதாகவே இருக்கட்டும்; (அல்லது); இரக்கமே ஆக - இரக்கம் உடையதாகவே இருக்கட்டும்; (இவன்) இங்கு வந்து - சிறைக்கு வந்து; எம்பிரான் நாமம் சொல்லி - எம்முடைய இராகவன் பெயரைக் கூறி; உணர்வை உருக்கினன் - என்னுடைய உணர்ச்சியை நெகிழச் செய்தான்; உயிர் தந்தான் - உயிரை |