பக்கம் எண் :

உருக் காட்டு படலம்351

வழங்கினான்;இதின் உதவி உண்டோ - இதைவிடச் சிறந்த உபகாரம்
உள்ளதோ.

    எம்பிரான்நாமம் சொல்லி உருக்கிய இவன் எவனாக இருப்பினும்
கவலையில்லை. இவன் மதிக்கத்தக்கவன் என்று பிராட்டி பேசினாள். எம்பிரான்
நாமம் பாலை நிலத்தில் தவிப்பார்க்குக் குளிர் சோலையாய் இருக்கும்.
திருமாலைப் பாடக்கேட்டு, மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாள், என்பர்
பரகாலர். சம்பந்தர் ‘பிறையாளன் திருநாமம் பேசுக’ என்று சிறையாரும்
மடக்கிளிக்குப் பணிப்பர். எம்பிரான் நாமம் கூறுபவர், எந்த
நிலையிலிருப்பினும் போற்றத் தக்கவர் என்க. ஆக - வியங்கோள். உருகினால்
அன்றி உணர்வு வாராது. உணர்வு வந்தாலன்றி உயிர் அமைதி பெறாது
என்பது குறிப்பு. உணர்வு, உணர்ச்சி, அறிவு, ஆன்மா என்னும் பல பொருள்
தரும் சொல் அனைத்தும் ஈண்டு ஏற்கும். இவரே அந்தாதியில் ‘உயிர்
உருக்கும்’ என்று பேசுகிறார் (சடகோபரந்தாதி)                   (27)

5255.

எனநினைத்து, எய்த நோக்கி, ’இரங்கும் என்
                         உள்ளம்; கள்ளம்
மனன் அகத்துஉடையர் ஆய வஞ்சகர் மாற்றம்
                         அல்லன்;
நினைவுடைச்சொற்கள் கண்ணீர் நிலம் புக,
                         புலம்பா நின்றான்;
வினவுதற்கு உரியன்’ என்னா, ‘வீர ! நீ யாவன் ?’
                         என்றாள்.

     எனநினைந்து -என்றுகருதி; (அனுமனை) எய்த நோக்கி -
செவ்வையாக நோக்கி (இவனால்); என் உள்ளம் இரங்கும் - என் மனம்
இவனால் உருகும்; (இவன்) மனன் அகத்து - உள்ளத்தின் கண்ணே; கள்ளம்
உடையர் ஆய -
கபடத்தைப் பெற்றிருப்பவரான; வஞ்சகர் மாற்றம்
அல்லன் -
வஞ்சகர்களின் சொற்களை உடையவன் அல்லன்; கண்ணீர்
நிலம்புக -
கண்ணீரானது பூமியில் விழ; நினைவு உடைச் சொற்கள் -
வருத்தத்தால் வந்த சொற்களை; புலம்பா நின்றான் - அழுகையுடன்
பேசுகின்றான்; (ஆகையாலே) (இவன்) வினவுதற்கு உரியன் - பேசுவதற்குத்
தகுதியுடையவன்; என்னா - என்று ஆராய்ந்தறிந்து (பிராட்டி); வீர - வீரனே;
நீ யாவன் - நீ எவன்; என்றாள் - என்று வினவினாள்.

     இவன் தோற்றம்என்னை உருக்கிற்று. இவன் பேச்சு வஞ்சகமின்மையை
உணர்த்திற்று. இவன் புலம்புதல் இவன்