பக்கம் எண் :

354சுந்தர காண்டம்

 

மன்னவன்தனக்கு,நாயேன், மந்திரத்து உள்ளேன்;
                         வானின்
நல் நெடுங்காலின் மைந்தன்;
நாமமும் அனுமன்
                         என்பேன்.

     உம்கோன் -உமதுதலைவனான இராமபிரான்; அம்பு ஒன்றால் -
ஒருஅம்பினாலே; அன்னவன் தன்னை - அந்த வாலியின்; ஆவி வாங்கி
-
உயிரைப் போக்கி; பின்னவற்கு - அவன் தம்பியாகிய சுக்கிரீவனுக்கு; அரசு
நல்கி -
அரச பதவியை வழங்கி (உன்னைத்தேட); துணை எனப்பிடித்தான்
-
உதவியாகப் பற்றிக் கொண்ட அவனை; எங்கள் மன்னவன் தனக்கு -
எங்கள் அரசனாகிய சுக்கிரீவனுக்கு; நாயேன் - அடியேன்; மந்திரத்து
உள்ளேன் -
ஆலோசனைச் சபையில் உள்ளேன்; வானின் -
ஆகாயத்திலிருந்து தோன்றிய; நல்நெடுங் காலின் மைந்தன் - நல்ல நீண்ட
வாயு தேவனின் புதல்வன்; நாமம் - பெயர்; அனுமன் என்பேன் - அனுமன்
என்று பேசப்படுவேன்.

      வானிலிருந்துகாற்று தோன்றிற்று என்று பேசுவது இந்திய மரபு.
ஆதலின் வானின் கால் என்று பேசப்பெற்றது. வான் - மூலப்பிரகிருதி
இராமபிரான்பால், ‘காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றின் வந்தேன்.
நாமமும் அனுமன் என்பேன்’ (கம்ப. 3765.) என்று பேசினான். இராவணனை
வென்ற வாலி இராமபிரானின் ஓர் அம்பால் இறந்தான். ஆதலால்
இராவணனின் வலிமை கண்டு கலங்க வேண்டா என்பது குறிப்பு.     (31)

5259.

‘எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன; உலகம்
                           எல்லாம்
தழுவி நின்றுஎடுப்ப; வேலை தனித் தனி கடக்கும்
                           தாள;
குழுவின, உம்கோன் செய்யக் குறித்தது குறிப்பின்
                           உன்னி,
வழு இல,செய்தற்கு ஒத்த - வானரம் வானின்
                           நீண்ட.

     உம்கோன் -உம்தலைவனான இராமபிரான்; செய்யக் குறித்தது -
செய்யவேண்டும் என்று நினைத்ததை; குறிப்பின் உன்னி - குறிப்பால்
ஆராய்ந்து; வழு இல - குற்றம் இல்லாமல்; செய்தற்கு ஒத்த - செய்வதற்கு
உடன்பட்டுள்ள; வானரம் -