பக்கம் எண் :

358சுந்தர காண்டம்

    ஆயவன் தன்மைநிற்க - அந்த இராமனின் தன்மை இப்படியிருக்க;
தென்பால் - தெற்குத் திசையில்; ஏயவன் - (சுக்கிரீவனால்) ஏவப்
பெற்றவனும்; வாலி மைந்தன் - வாலியின் புதல்வனும் (ஆகிய); அங்கதன் -
அங்கதன் என்பவன்; இரண்டு வெள்ளம் சேனையோடு - இரண்டு
வெள்ளஞ்சேனையுடன்; எழுந்து படர்ந்து - எழுச்சி பெற்றுப் பரவி; மேயின
தீர -
வந்தவைகள் முடிவு போகச் செல்ல; அனையவன் - அந்த அங்கதன்;
பாய்திரை - பரவிய அலைகளால் சூழப்பெற்ற; இலங்கை மூதூர்க்கு -
இலங்கைக்கு; என்னை விடுத்தான் - என்னை அனுப்பினான்; என்றனன் -
என்று கூறினான் (கூறியவன்); பழியை வென்றான் - பழிக்கப்படும்
புலன்களை வென்ற அனுமன்.                                (36)

5264.

எய்து அவன்உரைத்தலோடும், எழுந்து, பேர்
                            உவகை ஏற,
வெய்து உறஒடுங்கும் மேனி வான் உற விம்மி
                            ஓங்க,
‘உய்தல் வந்துஉற்றதோ ?’ என்று அருவி நீர் ஒழுகு
                            கண்ணாள்,
‘ஐய ! சொல், ஐயன் மேனி எப்படிக்கு அறிதி ?’
                            என்றாள்.

     அருவி - அருவியைப் போல;நீர் ஒழுகும் கண்ணாள் - கண்ணீர்
சிந்தும் கண்களையுடைய பிராட்டி; எய்து அவன் - தூதனாக வந்த அனுமன்;
உரைத்த லோடும் - (பெருமான் அன்பை) உரைத்தவுடன்; எழுந்த -
தோன்றிய; பேர் உவகை ஏற - பெருமகிழ்ச்சி கரைகடக்கவும்; வெய்து உற
-
துன்பம் அதிகரித்ததால்; ஒடுங்கும் மேனி - இளைத்த திருமேனி; வானுற
-
நன்றாக; விம்மி ஓங்க - பூரித்துச் சிறப்பு அடையவும்; உய்தல் வந்து
உற்றதோ -
தப்பிப் பிழைத்தல் என்பால் வந்துவிட்டதோ; என்று - என்று
கூறி (அனுமனை நோக்கி); ஐயன் மேனி - இராமபிரானின் திருமேனி;
எப்படிக்கு - எந்தவிதமாக; அறிதி - அறிந்துள்ளாய்; சொல் என்றாள் -
கூறுக என்றாள்.

     உள்ளத்தில்உவகை மிகுந்ததால் உடல் பூரித்தது. துன்பத்தால் ஒடுங்கிய
மேனி விம்மி வீங்கிற்று. ‘மென்மருங்குல் போல் வேறுள அங்கமும்
மெலிந்தாள்’ என்று முன்பு பேசப்பெற்றது. ‘மெலிவு அகல ஓங்கினாள்’ என்றும்
‘உடல் தடித்தாள் வேறு ஒருத்தி ஒக்கின்றாள்’