பக்கம் எண் :

உருக் காட்டு படலம்363

பண்பில்லை என்க.ஆவம் அழிக்கும் கணைகட்கு இருப்பிடம். இவன்
கணைக்கால் ஆக்கும் திறம் பெற்றது. ஆதலால் ஒப்பாகா என்க.
கணைக்காலுக்கு அம்பறாத்தூணி ஒப்பு. அம்புபெய் தூணி... போன்ற
கணைக்கால் (உவமான. 12) தான் - அவை.                      (43)

5271.

‘அறம் கிளர் பறவையின் அரசன் ஆடு எழில்
பிறங்கு எருத்துஅணைவன பெயரும், பொற்புடை,
மறம் கிளர் மதகரிக் கரமும் நாணின,
குறங்கினுக்குஉவமை, இவ் உலகில் கூடுமோ ?

(ஐயனின் தொடைகள்)

     அறம் - அறத்தைப் போல;கிளர் - கிளர்ச்சி பெற்ற; பறவையின்
அரசன் -
பறவைகளுக்குத் தலைவனான கருடனின்; ஆடுஎழில் - வெற்றியும்
அழகும்; பிறங்கு - விளங்கும்; எருத்து அணைவன - பிடரியை
ஒத்திருப்பன; பெயரும் பொற்புடை - அசையும் அழகுடைய (அதைக்கண்டு);
மறங்கிளர் - வீரம் கிளர் கின்ற; மதகரிக் கரமும் - மதயானைகளின்
கைகள்;நாணின - உவமையாகாமல் நாணம் அடைந்தன (என்றால்);
குறங்கினுக்கு -இராமபிரானின் தொடைகளுக்கு; உவமை - ஒப்புமையாகத்
தக்க பொருள்கள்;இவ்வுலகில் கூடுமோ - இந்த உலகத்தில் கிட்டுமா ?

    இறைவனின்வாகனமான கருடனின் கழுத்தே பெருமான் தொடைகட்கு
ஒப்பு. பிற ஒப்பாகா. கருடனின் கிளர்ச்சி தருமத்தின் கிளர்ச்சி போன்றது.
கருடனின் கிளர்ச்சியை வேதாந்த தேசிகர் கருடதண்டகத்தில் பேசினார்.
கவிச்சக்கரவர்த்தி நாகபாசப்படலத்தில் இக்கிளர்ச்சியைப் பேசுவர். (கம்ப. 8244
- 49) குறங்கு - தொடை யானையின் தொடைக்கு உவமையாக்குவது மரபு
பிறங்கு எருத்தில் இருந்து நீங்கி வந்த தொடை என்று பொருள் கூறினர்.
ஆய்க. இஃது தூரகை. வடநூலார் ‘தூராந்வயம்’ என்பர் ‘பிறங்கு எருத்து
அணைவன குறங்கு’ என்று கூட்டினர்.                         (44)

5272.

‘வலம் சுழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின்
பொலஞ் சுழிஎன்றலும் புன்மை; பூவொடு
நிலம் சுழித்துஎழு மணி உந்தி நேர், இனி,
இலஞ்சியும்போலும் ? வேறு உவமை யாண்டுஅரோ ?

     பூவொடு - தாமரைப் பூவையும்;நிலம் - பூமியையும்; சுழித்து எழு -
கிளர்ந்து தோன்றிய (பெருமானின்); மணி உந்தி நேர் - அழகிய உந்திக்குச்
சமமாக;  வலம் சுழித்து - வலப்பக்கம் சுழித்துக்