பக்கம் எண் :

364சுந்தர காண்டம்

கொண்டு; ஒழுகும்நீர் - பெருக்கெடுக்கும் தண்ணீரை; வழங்கும் -
உலகங்கட்குத் தரும்; கங்கையின் - கங்கையின்; பொலஞ்சுழி என்றலும் -
அழகிய சுழி என்று கூறுவதும்; புன்மை - இழிவாகும் (அங்ஙனம் இருக்க)
(திருவுந்திக்கு); இனி இலஞ்சியும் - மகிழம்பூவும்; போலும் - ஒப்பாகுமோ
(இவற்றைத் தவிர); வேறு உவமை - வேறுபட்ட உவமானப் பொருள்கள்;
யாண்டு - எங்கே உள்ளது.

    மிக்க உந்திநீர்ச்சுழி (உவமான 77) புனற்சுழி அலைத்துப் பொருந்திய
கொப்பூழ் (பெருங் 2-15-68) என்றும், நீர்ப்பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்
(பொருநராற்று - 37) என்றும் பழம் பெரு நூல்கள் உந்தியை நீர்ச்சுழி என்று
பேசின. இராமனைத் திருமாலாகவே அனுமன் பேசுகின்றான். ஆதலின்
‘பூவொடு நிலம் சுழித் தெழுமணி உந்தி’ என்றான். சுழித்தெழுதல் -
மகி்ழ்ச்சியின் மிகுதியை உணர்த்தும். சேக்கிழார் அறாத செந்தீ வலம்
சுழிவுற்று... ஒளிர என்று பேசியது கருதுக. (பெரிய திருநீல நக்க 31) இலஞ்சி -
மகிழம்பூ - குருகை இடம் கொண்டான் இலஞ்சி பெற்றோன் (மாறனலங் 359)
போலும் - என்பதை எடுத்தல் ஓசையால் ஐயப்பொருள் தோன்றப் படித்து
உண்மை உணர்க. அரோ - அசை.                              (45)

5273.

‘பொரு அரு மரகதப் பொலன் கொள் மால் வரை
வெருவுற விரிந்துஉயர் விலங்கல் ஆகத்தைப்
பிரிவு அறநோற்றனள் என்னின், பின்னை, அத்
திருவினின் திருஉளார் யாவர் ? தெய்வமே !

     தெய்வமே ! -பிராட்டியே; பொருவு அரு - ஒப்பற்ற; பொலன்
கொள் -
அழகைக் கொண்ட; மரகதமால் வரை - மரகத மலையானது;
வெருவற - அஞ்சும்படி; விரிந்து  உயர் - பரந்து உயர்ந்துள்ள; விலங்கல்
ஆகத்தை -
மலைபோன்ற திருமார்பை; பிரிவு அற - பிரிதல் இல்லாமல்
(அங்கே வாழ); நோற்றனள் என்னில் - திருமகள் தவம் செய்தாள் என்றால்;
அத்திருவினில் - அந்தத் திருமகளைவிட; பின்னை யாவர் திருவுளார் -
பிறகு எவர் பேறு பெற்றவர்.

     பின்னை,விலங்கல் ஆகத்தைப் பிரிவு அற நோற்றனள் என்னின்
திருவினும் யாவர் திருவுளார் எனமுடிக்க. பின்னை என்றற்கு பிறகு என்றே
பொருள் கூறப்பெற்றது. பின்னை - திருமகள். பின்னை மணாளனை பேரிற்
கிடந்தாளை (பெரியாழ்வார் 2-5-1) இது கிருஷ்ணாவதாரத்துக்குப் பிற்பட்ட
வழக்கு - இராமாவதாரத்தில் அனுமன் கூற்றில் பொருந்தாது. பிராட்டியைத்
தெய்வம் என்றான்.