நாட்களில்வெளிப்படையாகத் தெரியும்; தனி மறுவும் - தனியாகவுள்ள களங்கமும்; வளர்வும் தேய்வும் - வளர்தலும் தேய்தலும்; வாள் அரவம் - கொடிய பாம்பால்; ஒருநாள் கவ்வும் - ஒரு நாள் கவ்வப்படும்; உறுகோளும் - மிக்க துன்பமும்; இறப்பும் பிறப்பும் - அழிதலும் தோன்றுதலும்; ஒழிவுற்றால் - நீங்கப் பெற்றால்; அலங்கல் இருளின் - அசைகின்ற இருளின்; எழில் நிழற் கீ்ழ் - அழகிய நிழலுக்குக் கீழே; பெருநாள் நிற்பின் - நீண்ட நாட்கள் நின்றால் (அது); அவன் - இராமபிரானுடைய; நெற்றிப் பெற்றித்து ஆக பெறும் - நெற்றியின் தன்மை உடையதாகக் கருதப்பெறும். மதி,ஒழிவுற்றால், நிற்பின், பெற்றித்து, ஆகப் பெறும் என்று கூட்டுக. அசையும் இருள் என்றது பெருமானின் நெற்றியின்பால் அசையும் அளகத்தை. அளகம் - முன் நெற்றி மயிர். இருள் உவம ஆகுபெயராய் இருள் போன்ற தலை உரோமத் தொகுதியை உணர்த்திற்று. இருண்ட குழற்கற்றையின் கீழ் விளங்கும் பெருமான் நெற்றிக்கு இருளின் கீ்ழ் ஒளிரும் பிறை ஒன்று இருக்குமாயின் ஒப்பாகும் என்றவாறு (அண்ணாமலை பதிப்பு) (56) | 5284. | ‘நீண்டு, குழன்று, நெய்த்து, இருண்டு, நெறிந்து,செறிந்து, நெடு நீலம் பூண்டு, புரிந்து,சரிந்து, கடை சுருண்டு,புகையும் நறும் பூவும் வேண்டும் அல்லஎன, தெய்வ வெறியேகமழும் நறுங் குஞ்சி, ஈண்டு சடை ஆயினதுஎன்றால், மழை என்றுஉரைத்தல் இழிவு அன்றோ ? |
நீண்டு குழன்று -நீளமாகியும் குழைந்தும்; நெய்த்து இருண்டு - பளபளத்தும் கருத்தும்; நெறிந்து செறிந்து - நெளிந்தும் அடர்ந்தும்; நெடுநீலம் பூண்டு - நீலநிறத்தைப் பெற்றும்; புரிந்து சரிந்து - அசைந்தும் தாழ்ந்தும்; கடை சுருண்டு - இறுதிப் பகுதி சுருண்டும்; புகையும் நறும் பூவும் - வாசனைப் புகையும் மண மலரும்; வேண்டும் அல்ல என - வேண்டுவன இல்லை என்று; தெய்வ வெறியே கமழும் - தெய்வ மணம் கமழ்கின்ற; நறுங்குஞ்சி - நல்ல குழல்; ஈண்டு - இந்தக் கானகத்தில்; சடையாயினது என்றால் - சடையாகிவிட்டது என்பதால்; (அதன் எளிமை கருதி) மழை |