என்று உரைத்தல் -அதனைமேகம் என்று கூறுவது; இழிவு அன்றோ - தாழ்வு அல்லவா. நறுங்குஞ்சிசடையாயினது என்றால் மழை என்று கூறுவது இழிவு எனச் சேர்க்க. இராமபிரான் நறுங்குஞ்சி கருநீலம் என்பதை உணர்த்த ‘இருண்டு நெடுநீலம் பூண்டு’ என்று கூறப் பெற்றது. ‘பட்டுக் கருநீலம்’ என்று கவிச்சக்கரவர்த்தி பாரதி பாடுவார் (கண்ணம்மா - காதலி) குலசேகரர் ‘நறுங்குஞ்சி புன்சடையா’ என்று பாசுரம் இட்டார் (தசரதன் புலம்பல்) அதற்கு விளக்கம் இப்பாடல். ‘அரிவை கூந்தலின் நறியவும் உளவோ’ என்று குறுந்தொகை பேசும். (குறுந் 2) அதை ஒட்டி மகளிர் குழல் போலவே ஆடவர் குழலுக்கும் நறுமணம் உண்டு என உணர்க. ஈண்டு என்றது கானகத்தை. ஈண்டு - இவ்விடம். அன்றி ஈண்டு என்பதைச் சடைக்கு அடைமொழியாக்கி, அடர்ந்த சடை என்றும் கூறலாம். (57) | 5285. | ‘புல்லல்ஏற்ற திருமகளும், பூவும்,பொருந்தப் புவி ஏழும் எல்லை ஏற்றநெடுஞ் செல்வம் எதிர்ந்தஞான்றும், அஃது இன்றி அல்லல் ஏற்றகானகத்தும், அழியாநடையை, இழிவான மல்லல் ஏற்றின்உளது என்றால், மத்த யானைவருந்தாதோ ?’ |
புல்லல் ஏற்றதிருமகளும் - தழுவுதலை மேற்கொண்ட திருமடந்தையும்; பூவும் - நிலமடந்தையும்; பொருந்த - தன்பக்கல் தங்க (அதனால்); புவி ஏழின் - ஏழு உலகங்களின்; எல்லை ஏற்ற - எல்லையை ஏற்றுக் கொண்ட; நெடும் செல்வம் - நீட்சி மிக்க செல்வமானது; எதிர்ந்த ஞான்றும் - எதிர்ப்பட்ட காலத்திலும்; அஃது இன்றி - அச்செல்வம் இல்லாமல்; அல்லல் ஏற்ற - துன்பம் மிக்குயர்ந்த; கானகத்தும் - காட்டின் கண்ணேயும்; அழியா நடையை - தளர்ச்சியடையாத நடையை; இழிவான மல்லல் - தாழ்வுற்ற வளத்தைப் பெற்ற; ஏற்றின் உளது - காளையின்பால் உள்ளது; என்றால் - என்று கூறினால்; மத்த யானை - மதம் மிக்க யானையானது; வருந்தாதோ - வருத்தம் அடையாதோ. காளையின்பால் இராமபிரான் நடை உள்ளது என்று கூறின் யானை வருந்தும் என்று கூறிப் புதிய அணிக்கு வழிவகுத்த கவிச்சக்கரவர்த்தி புலமையை வழிபடுக. கானகத்தும் - என்பதில் உள்ள |