பக்கம் எண் :

374சுந்தர காண்டம்

உம் - அசை.‘காமக்கடல் மன்னும் உண்டோ’ (குறள் 1164) அழகர் மன்னும்
உம்மும் அசை நிலை என்றார்.காலத்தும் என்னும் பாடம் கானத்தும் என்று
பாடபேதம்ஆயிற்று போலும். நடையை என்பதில் உள்ள ஐ அசை - உருபு
அன்று.நடைஉளது, என்றால் புகழானை.......... விளக்கினான் (சிந்தா 2605) (58)

5286.

இன்னமொழிய, அம் மொழி கேட்டு,
     எரியின்இட்ட மெழுகு என்ன,
தன்னை அறியாதுஅயர்வாளை,
     தரையின்வணங்கி, ‘நாயகனார்
சொன்ன குறி உண்டு; அடையாளச்
    சொல்லும் உளவால், அவை, தோகை
அன்ன நடையாய்,கேட்க ! என,
     அறிவன்அறைவான் ஆயினான்;

(அனுமன்) (பெருமான்அழகை)

     இன்ன மொழிய- இப்படி எடுத்துக்கூற; அம்மொழி கேட்டு -
அச்சொற்களைக் கேட்டு; எரியின் இட்ட - நெருப்பில் இடப்பட்ட; மெழுகு
என்ன  -
மெழுகைப்  போல; தன்னை அறியாது அயர்வாளை -
தன்னையே அறிந்து கொள்ளாமல் வருந்தும் பிராட்டியை; அறிவன் -
அறிவுமிக்க அனுமன்; தரையின் வணங்கி - பூமியில் விழுந்து வணங்கி;
தோகை அன்ன நடையாய் - மயில் போலும் நடையை உடைய அம்மையே;
நாயகனார் சொன்ன குறி உண்டு - இராமபிரான் என்பால் வழங்கிய பொன்
அடையாளம் உண்டு; அடையாளச் சொல்லும் உள - அடையாளச்
சொற்களும் உள்ளன; அவை கேட்க என - அவற்றைக் கேட்டு அறிக
என்று; அறைவான் ஆயினான் - சொல்லத் தொடங்கினான்.

    அறிவன் -அனுமன். தோகை - மயில். மகளிர் நடைக்கு மயிலின் நடை
ஒப்பு. மணி வரைச் சாரல் மஞ்ஞைபோல அணிபெற இயலி (பெருங்கதை 3-13-
50-57) தோகை அன்னநடை என்று விரித்து மயிலையும் அன்னத்தையும் ஒத்த
நடை என்றும் கூறலாம். நாயகன் என்னும் பெயர் முன் ஆர் வந்தது. அஃது
இயற்பெயர் முன்னர் வந்த ஆரைக்கிளவியாகும் (சொல் 272) நச்சர் உரை
அறிந்து அமைக. அவர் பெரும்பான்மை இயற்பெயர் கூறவே சிறுபான்மை
உயர்திணைப் பெயர் முன்னரும் வருதல் ஒன்றென முடித்தலால் கொள்க
என்பர். ‘குறிகளும் அடையாளமும்’ என்பர் அப்பர். அஃது இங்கு
கவிச்சக்கரவர்த்திக்கு கைகொடுத்தது. மெய்ப்பொருள் ஆய்க. அனுமன்
தெரிந்துரைத்த