அடையாளம் என்பர்பெரியாழ்வார் (பெரியாழ்வார் 3-10-10) சொன்ன குறி என்பதற்குத் தங்கம் உணர்த்தும் அடையாளம் என்று பொருள் கொள்க. சொன்னம் - பொன். பொன் இங்கு திருவாழியை உணர்த்திற்று. ‘ஒரு கையிலே அன்னம் ஒரு கையிலே சொன்னம், வருகையிலே சம்மான வார்த்தை’ (பெருந்தொகை 1366) சொன்ன குறி என்பதற்குச் சொல்லிய குறிப்பு என்றே பலர் உரை கண்டனர். (59) அனுமன் கூறியஅடையாளவுரைகள் சந்தக் கலிவிருத்தம் | 5287. | ‘ “நடத்தல் அரிது ஆகும் நெறி; நாள்கள் சில; தாயர்க்கு அடுத்த பணிசெய்து இவண் இருத்தி” என, அச் சொற்கு, உடுத்ததுகிலோடும், உயிர் உக்க உடலோடும், எடுத்தமுனிவோடும், அயல் நின்றதும் இசைப்பாய். |
(சீதையே) நெறி - காட்டுவழியில்;நடத்தல் அரிது ஆகும் - நடப்பது உனக்கு இயலாதது ஆகும்; (ஆதலால்) நாள்கள் சில - யான் கானகத்தில் வாழும் நாள்கள் சிலவே (அதுவரை); தாயர்க்கு - என்னுடைய தாய்மார்கட்கு; அடுத்த பணி செய்து - ஏற்ற பணிவிடைகளைச் செய்து கொண்டு; இவண் இருத்தி என - அயோத்தியில் இரு என்று யான் கூற; (உடனே) அச்சொற்கு - அச்சொல்லைக் கேட்ட அளவில்; உடுத்த துகிலோடும் - புனைந்த மரவுரியுடனும்; உயிர் உக்க உடலோடும் - உயிர் கலங்கிய உடலுடனும்; எடுத்த முனிவோடும் - மிக்க கோபத்துடனும்; அயல் நின்றதும் - (பயணத்துக்கு ஆயத்தமாய்) என்பக்கத்தில் நின்றதையும்; இசைப்பாய் - (அனுமானே நீ) பிராட்டியிடம் கூறுக. இராமபிரானின்மொழியை அப்படியே அனுமன் பிராட்டியின் பால் சமர்ப்பிக்கின்றான். நாடவிட்ட படலத்தில் பெருமான் அனுமன்பால் கூறியதை ஒப்பிடுக. (கம்ப. 4516 - 4517) பெருமான் கூறியதை அனுமன் சிறுசிறு மாற்றங்களுடன் கூறிய திறம் பாராட்டற்பாலது. உடுத்த துகிலோடு பிராட்டி வந்தது விரைவையும் ஆவேசத்தையும் காட்டுகிறது. ‘அனைய வேலை அகமனை எய்தினள்... சீரம் துணிந்து புனைந்தனள்... வள்ளல் பின் வந்து அயல் நின்றனள். பனையின் நீள்கரம் பற்றிய கையினாள் என்று முன்பு பேசப் பெற்றது |