பக்கம் எண் :

376சுந்தர காண்டம்

(கம்ப. 1829) ‘உயிர்உமிழா நின்றாள்’ என்றும் (கம்ப. 1825) ‘ஊன் இலா
உயிரின் வெந்து’ என்றும் (கம்ப. 4517) பேசப்பட்டன. இங்கு அவற்றை
எல்லாம் அடக்கி, ‘உயிர் உக்க உடலோடும்’ என்று பேசப்படுகிறது. இவ்
விருத்தம் விளங்காய் - விளங்காய் - விளங்காய் - தேமா என்னும் 4 சீர்களை
முறையே பெற்று   வரும். இப்பாடல் நேரசையில் தொடங்கின 14
எழுத்தையும் நிரையசையில் தொடங்கின் 15 எழுத்தையும் பெற்று வரும்.
இப்பாடல் 292 முறை காட்சி தருகின்றது. இதனை கம்பன் அடிப்பொடி
அவர்கள் ‘அளவடி நான்குடைச் சந்தக் கலிவிருத்தம்’ என்பர். (மணிமலர் 76)
                                                         (60)

5288.

‘ “நீண்டமுடி வேந்தன் அருள் ஏந்தி, நிறை
                                 செல்வம்
பூண்டு, அதனைநீங்கி, நெறி போதலுறு நாளின்,
ஆண்ட நகர்ஆரையொடு வாயில் அகலாமுன்,
யாண்டையது கான்?” என, இசைத்ததும் இசைப்பாய்.

     நீண்டமுடிவேந்தன் - நீண்ட முடிதரித்ததசரதச் சக்கரவர்த்தியின்;
அருள் ஏந்தி - கட்டளையை ஏற்று; நிறை செல்வம் பூண்டு - அரசச்
செல்வத்தை ஏற்றுக் கொண்டு; அதனை நீங்கி - அரசாட்சியை விட்டுவிலகி;
நெறி போதலுறும் நாளின் - வழியிலே போகும் நாளிலே; ஆண்ட நகர் -
முன்னோர்கள் ஆட்சி புரிந்த அயோத்தியில்; ஆரையொடு வாயில் அகலா
முன் -
மதிலுடன் கூடிய வாயில் கடப்பதற்கு முன்; கான் யாண்டையது என
-
காடு எங்கே உள்ளது என்று; இசைத்ததும் - பிராட்டி வினவியதையும்;
இசைப்பாய் - (அனுமானே) கூறுவாயாக.

     முடியை, நீள்முடி,என்றும் நெடுமுடி என்றும் கூறுவது கவிச்
சக்கரவர்த்தியின் இயல்பு. மதில் மணிக்கடை கடந்திடுமுன் .... வெங்கானம்
யாதோ ? எனச் சொல்லினாள்... சொல்லுவாய் என்று நாட விட்ட படலம்
(கம்ப. 4518) கூறும். இது சிலம்பிலிருந்து கவிச்சக்கரவர்த்தி யறிந்தது. பத்தினித்
தெய்வம் ‘மதுரை மூதூர் யாது என வினவ, (சிலம்பு நாடு காண் 41) இதுவே
புகழேந்தி நளனின் மக்கள் மொழியாகப் பேசியது நன்று - குழந்தைகள்
‘வழியானது எல்லாம் கடந்தோமோ’ என்று வினவும். ஆரை - மதில்.
வண்கிடங்கு சூழும் ஆரை வைசயந்த நகரிலே, என்பர் நிரம்ப அழகிய
தேசிகர் (சேது புராணம் சீதை.5.)                              (61)

5289. 

‘ “எள் அரிய தேர் தரு சுமந்திரன் ! இசைப்பாய்,
வள்ளல் மொழிவாசகம்; மனத் துயர் மறந்தாள்;