| | கிள்ளையொடுபூவைகள் வளர்த்தல் கிள” என்னும், பிள்ளை உரையின்திறம் உணர்த்துதி, பெயர்த்தும். |
எள் அரியதேர்தரு சுமந்திரன் - இகழ்ச்சியில்லாததேரோட்டும் சுமந்திரனானவன்; (பிராட்டியை நோக்கி) நீ வள்ளல் மொழி - இராமபிரான் மொழி வழியில்; வாசகம் இசைப்பாய் என - வார்த்தை கூறுக என்று கூற; மனத்துயர் மறந்தாள் - மனத் துன்பம் மறந்த பிராட்டி; கிள்ளையொடு பூவைகள் - கிளிகளையும் நாகணவாய்ப் பறவைகளையும்; வளர்த்தல் - வளர்ப்பதை; கிள என்னும் - (என் சகோதரிகள் பால்) கூறுக என்னும்; பிள்ளை உரையின் திறம் - குழந்தையியல்புள்ள மொழியின் தன்மையை; பெயர்த்தும் - மீளவும்; உணர்த்துதி - (அனுமானே) கூறுக. சுமந்திரன்,மொழி, வாசகம் எனத்துயர் மறந்தாள் வளர்த்தல் கிள என்னும் பிள்ளை மொழியின் திறம் உணர்த்துதி என்று சேர்க்கவும் வள்ளல் மொழி - வள்ளல் பேசிய வழியில்; பொன் நிறப் பூவையும் கிளியும் போற்றுக என்று உன்னுமென் தங்கையர்க்கு உணர்த்துவாய்’ என்று முன்பு பேசப்பெற்றது (கம்ப. 1878) (62) அனுமன்திருவாழியைக் காட்டலும் பிராட்டியின்நிலையும் | 5290. | ‘ “மீட்டும் உரை வேண்டுவன இல்லை” என, “மெய்ப் பேர் தீட்டியது; தீட்டஅரிய செய்கையது; செவ்வே, நீட்டு இது” என,நேர்ந்தனன்’ எனா, நெடிய கையால், காட்டினன் ஓர்ஆழி; அது வாள் நுதலி கண்டாள். |
மீட்டும் உரைவேண்டுவன இல்லை என - திரும்பவும் யான் கூற வேண்டியவை இல்லை என்று; மெய்ப்பேர் தீட்டியது - உண்மைப் பேர் பொறிக்கப்பட்டதும்; தீட்டரிய செய்கையது - எழுத முடியாத வேலைப்பாடு பெற்றதும்; (ஆன) இது - இந்தத் திருவாழி; செவ்வே நீட்டு என - செவ்வையாய் அமைந்த திருமுகம் என்று கூறி; (இராமபிரான்) நேர்ந்தனன் - என்பால் வழங்கினான்; எனா - என்று கூறி (அனுமன்); நெடிய கையால் - நீண்ட கைகளில்; ஓர் ஆழி - ஒப்பற்ற மோதிரத்தை; காட்டினன் - காண்பித்தான்; |