பக்கம் எண் :

378சுந்தர காண்டம்

அது - அந்த மோதிரத்தை; வாள் நுதலி - ஒளிமிக்க நெற்றியை உடைய
பிராட்டி; கண்டாள் - பார்த்தாள்.

     நீட்டு -திருமுகம் (கடிதம்) சித்திர சேனன் நீட்டு அவிழா (உபதேச
காண்டம்; சிவத்துரோகம் 174) அமரர் கம்பனடிப்பொடி, ‘நீட்டு’ என்பதற்குக்
குறிப்பு மொழி அடங்கிய ஓலை என்று பொருள் கூறிக் கல்வெட்டை ஆதாரம்
காட்டுவர். அவர், நீட்டோலை வாசியா நின்றான்... மரம்’ என்னும் பாடலை
மேற் கோள் நினைவு கூர்வர்.                               (63)

5291.

இறந்தவர்பிறந்த பயன் எய்தினர்கொல் என்கோ ?
மறந்தவர்அறிந்து உணர்வு வந்தனர்கொல் என்கோ ?
துறந்த உயிர்வந்து இடை தொடர்ந்ததுகொல்
                                   என்கோ ?
திறம் தெரிவதுஎன்னைகொல், இந் நல் நுதலி
                                    செய்கை ?

     இந் நல் நுதலிசெய்கை - அழகிய நெற்றியை உடையஇந்தப்
பிராட்டியின் செய்கைக்கு; (உவமையாக) இறந்தவர் - நெறி கடந்து
வாழ்ந்தவர்கள்; பிறந்த பயன் - பிறத்தலால் உண்டாகும் பயனை; எய்தினர்
கொல் என்கோ -
பெற்ற செய்கை என்று கூறுவேனோ; மறந்தவர் -
தம்மையே மறந்தவர்கள்; அறிந்து - தம்மையும் தலைவனையும் அறிந்து;
உணர்வு வந்தனர் கொல் என்கோ - பேருணர்வு பெற்ற செய்கை என்று
கூறுவேனோ ? துறந்த உயிர் - உடலைவிட்டு நீங்கிய உயிர்; இடைவந்து -
தக்க சமயத்தில் வந்து; தொடர்ந்தது கொல் என்கோ - ஒன்றுபட்டது என்று
கூறுவேனோ ? திறம் - பிராட்டியின் தன்மையை; தெரிவது என்னை -
அறிவது எப்படி.

     எய்தினர்,வந்தனர், என்னும் முற்றுக்கள் பெயரெச்சப் பொருள் தந்தது.
இன்றேல் இரண்டு எழுவாயைச் சந்திக்க நேரும். இருவகை முற்று ஈரெச்சம்
ஆகலும் (இலக்கணக் கொத்து 82) எய்திய செய்கை, வந்த செய்கை என
அமையும். திருவாழியைக் கண்ட பிராட்டியின் செயல் 6 பாடல்கள் பேசும்.
மறந்தவர் - தம்மை மறந்தவர்கள். தம்மை மறந்தவர்கள், தம்மையும்
தலைவனையும் அறிந்து பெறுவதே உணர்வு. பிறந்த பயன், என்பது
பிறத்தலால் பெறவேண்டிய பயன் (தொல், சொல் 236) கொல், அனைத்தும்
அசை.                                                 (64)

5292.

இழந்த மணிபுற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்;
பழந் தனம்இழந்தன படைத்தவரை ஒத்தாள்;