(பிராட்டிமோதிரத்தை) வாங்கினள் -எடுத்துக்கொண்டாள் (அதை); முலைக் குவையில் வைத்தனள் - தனங்களின் மேலே வைத்துக் கொண்டாள்; சிரத்தால் தாங்கினள் - தலையிலே வைத்துக் கொண்டாள்; மலர்க்கண் மிசை ஒற்றினள் - மலர் போன்ற கண்களில் ஒற்றிக் கொண்டாள்; தடந்தோள் வீ்ங்கினள் - பெரியதோள் பூரித்தாள்; மெலிந்தனள் - இளைத்தாள்; குளிர்ந்தனள் - குளிர்ச்சியடைந்தாள்; வெதுப்போடு ஏங்கினள் - வெப்பத்துடன் ஏக்கமுற்றாள்; உயிர்த்தனள் - பெரு மூச்சு விட்டாள்; இது (பிராட்டியடைந்த) இந்த மெய்ப்பாட்டை; இன்னது எனல் ஆமோ - இன்ன மெய்ப்பாடு என்று கூற முடியுமா. எண்வகைமெய்ப்பாடுகளுள், பிராட்டியின் மெய்ப்பாடு இன்னது என்று கூறவியலுமா. இவள் நிலை இதுதான் என்று வரையறுத்துக் கூறல் இயலாது. (66) | 5294. | மோக்கும்; முலை வைத்து உற முயங்கும்; ஒளிர் நல் நீர் நீக்கி, நிறைகண் இணை ததும்ப, நெடு நீளம் நோக்கும்;நுவலக் கருதும், ஒன்றும் நுவல்கில்லாள்; மேக்கு நிமிர்விம்மலள்; விழுங்கலுறுகின்றாள். |
(பிராட்டிமோதிரத்தை) மோக்கும் -மோந்துபார்ப்பாள் (அதை); முலை வைத்து - தனங்களிலே வைத்து; உற முயங்கும் - நன்றாகத் தழுவிக் கொள்வாள்; ஒளிர் நல்நீர் - ஒளிர்கின்ற ஆனந்தக் கண்ணீர்; நிறை கண் இணை ததும்ப- அழகு நிறைந்த இரண்டு கண்களில் ததும்ப; நீக்கி - அதைத் துடைத்துக்கொண்டு; நெடு நீளம் நோக்கும் - நீ்ண்ட பறவைக் கூட்டைப் பார்ப்பாள்;நுவலக் கருதும் - (பறவைக் கூட்டால் வந்த நினைவை) கூறநினைப்பாள்;ஒன்றும் நுவல்கில்லாள் - ஒன்றும் கூற முடியாமல்; மேக்கு - மிகுதியாக; நிமிர் விம்மிலள் - கிளர்ச்சி பெற்ற அழுகை உடையவளாய்; விழுங்கல்உறுகின்றாள் - அதை அடக்க முயல்கின்றாள். நீளம் - பறவைக்கூடு. பறவைக் கூட்டை இராமபிரான் நோக்கியது ! நிந்தையில் சகுந்தங்கள் நீளம் நோக்கின. அந்தியை நோக்கினான், அறிவை நோக்கினான்’ (கம்ப. 2086) என்று பேசப்பெற்றது அஃது இப்போது பிராட்டிக்கு நினைவு வந்தது போலும். ‘நெடுநீளம் |