நோக்கும்’ என்பதற்குநெடுநேரம் மோதிரத்தைப் பார்ப்பாள் என்றும் உரை கொள்ளலாம். மாலைக் காலத்தில் பறவைகள் தம் கூட்டை அடை தலை நோக்கும் போது உணர்வு முகிழ்க்கும். பெருமான் என மகிழ்வதும், அல்ல என்று வருந்துவதும், ஆம் என்று ஊடுவதும், அல்ல என்று வாய் மூடுவதும் மோதிரத்தை விழுங்குவோம் என்பதும் பொருள். என்பது பழைய வுரை (அடை - பதி). (67) | 5295. | நீண்டவிழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம் பூண்டது, ஒளிர்பொன் அனைய பொம்மல் நிறம்; மெய்யே ! ஆண்தகைதன்மோதிரம் அடுத்த பொருள் எல்லாம் தீண்டு அளவில்,வேதிகை செய் தெய்வ மணிகொல்லோ ? |
நீண்ட விழிநேரிழைதன் - நீண்ட கண்களையும்அழகிய ஆபரணங்களையும் உடைய பிராட்டியின்; மின்னின் நிறம் எல்லாம் - மின்னல் போலப் பசலை படர்ந்த மேனி முற்றும்; ஒளிர் - விளங்குகின்ற; பொன் அனைய - பொன்னை ஒத்த; பொம்மல் நிறம் பூண்டது - பொலிவுடைய நிறத்தைப் பெற்றது; (இந்த மாற்றம்) மெய்யே - உண்மையே (ஆதலால்); ஆண் தகைதன் - ஆடவருள் தலைசிறந்த இராமபிரானின்; மோதிரம் - மோதிரம் ஆனது; அடுத்த பொருள் எல்லாம் - தன்னைச் சார்ந்த எல்லாப் பொருள்களையும்; தீண்டு அளவில் - தொட்ட மாத்திரத் தில்;வேதிகை செய் - பொன்னாக மாற்றுகின்ற; தெய்வமணி கொல் -தெய்வத்தன்மை பெற்ற ரச குளிகையோ. வேதிகை செய்தல்- ஒரு பொருளை வேறு பொருளாக மாற்றுதல். பரிசவேதி செம்பைப் பொன்னாக்கும் என்பது சித்தரின் கொள்கை. இரச குளிகையினால் களிம்பு அற்றுப் பொன்னாய்ச் செம்பொனுடன் சேரும். (சிவ.சித்தி 11.2.9.) மின் நிறம் பொன்நிறம் ஆயிற்று. மோதிரம் பரிசவேதியோ என்று கவிச்சக்கரவர்த்தி வியக்கின்றார். (68) | 5296. | இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும் அருந்தும் அமுது ஆகியது; அறத்தவரை அண்மும் விருந்தும் எனல்ஆகியது; வீயும் உயிர் மீளும் மருந்தும் எனல்ஆகியது; வாழி மணி ஆழி ! |
மணி ஆழி -மணிகள்பதித்த அந்த மோதிரம்; பசியால் - பசியினால்;இருந்து - (பிறிதோரிடம் செல்லாமல்) வீட்டிலே |