பக்கம் எண் :

382சுந்தர காண்டம்

இருந்து; இடர்உழந்தவர்கள் - துன்பத்தால் வருந்தியவர்கள்; எய்தும் -
அடைந்த; அருந்தும் அமுது ஆகியது - உண்ணும் உணவாக ஆயிற்று;
அறத்தவரை - இல்லறத்தில் இருப்பவரை; அண்மும் - சென்று சேர்ந்த;
விருந்தும் எனல் ஆகியது - விருந்தாளி என்று கூறும் படியாகவும் ஆயிற்று;
வீயும் உயிர் - இறக்கப் போகும் உயிர்; மீளும் - திரும்புதற்குக்
காரணமாயிருக்கும்; மருந்தும் எனல் ஆகியது - மருந்து என்று
கூறும்படியாகவும் ஆயிற்று; வாழி - அந்த திருவாழி பல்லாண்டு வாழ்க.

    விருந்தும்மருந்தும் என்பதில் உள்ள உம்மைகளை எனலும் ஆகியது
என்று இரண்டிடத்தும் சேர்க்க. விருந்து எனலும் ஆகியது மருந்து எனலும்
ஆகியது என அமையும். விருந்தினர் முகம் காணும் நல்ல இல்லறத்தார்
மகிழ்வர். விருந்தினர் முகம் கண்டு அன்ன விழா என்று முன்பு பேசப்
பெற்றது (நாட்டு - 15) விழாவைக் காணும் போது உண்டாம் மகிழ்ச்சி
விருந்தால் உண்டாம் என்பது குறிப்பு. விருந்து கண்டு ஒளிக்கும் வாழ்க்கை
திருந்தா வாழ்க்கை என்று இகழப்படும்.(69)

சீதை அனுமனைவாழ்த்துதல்.

5297.

இத்தகையள் ஆகி, உயிர் ஏமுற விளங்கும்,
முத்த நகையாள்,விழியின் ஆலி முலை முன்றில்
தத்தி உக, மென்குதலை தள்ள, ‘உயிர் தந்தாய் !
உத்தம !’ எனா,இனைய வாசகம் உரைத்தாள்;

(திருவாழிபெற்றமையால்)

     உயிர் ஏமுற -உயிரினம்மகிழ்ச்சி பெருக (அதனாலே); விளங்கும் -
பொலிவுறுகின்ற; முத்த நகையாள் - முத்தை ஒத்த பற்களை உடைய பிராட்
டி;இத்தகையள் ஆகி - இப்படிப்பட்ட மெய்ப்பாடு உடையவளாய்;
விழியின்ஆலி - கண்களில் வழியும் நீர்த்துளிகள்; முலை முன்றில் -
தனங்களின்மேற்பரப்பில்; தத்தி உக - பட்டுத் தெறித்துச் சிதறவும்; மென்
குதலை தள்ள-
மெல்லிய மழலைச் சொற்கள் தடுமாறவும்; (பூரித்து) உத்தம
! -
மேலானவனே (நீ); உயிர் தந்தாய் - என் உயிரை வழங்கினாய்; எனா -
என்று (புகழ்ந்து); இனைய வாசகம் - இந்த மொழிகளை; உரைத்தாள் -
கூறினாள்.