பக்கம் எண் :

388சுந்தர காண்டம்

சாலையை அடைந்து; நின் திரு வடிவு காணான் - உன்னுடைய அழகிய
வடிவத்தைக் காணாமல்; உயிர் உண்டு - பெருமூச்சையே உணவாகக்
கொண்டு; இருந்தான் - உயிருடன் இருந்தனன் (அவன்); இன்னல்
உழப்பதற்கு -
துன்பத்தை அனுபவிப்பதற்கு; ஏது ஒன்றோ - காரணம் இது
ஒன்று தானா ?

     வண் துறை சாலை,என்று பிரித்து வளமான நீர்த்துறையை அடுத்த
சாலை என்றும் பொருள் கூறலாம். உண்டு உயிர் இருந்தான் என்பதற்கு
உயிருள்ளது என்னும் நிலையில் மட்டும் இருந்தவன் ஆனான் என்று
கூறப்பெற்றது. புண்டரீகம். இச்சொல் வெண்டாமரை என்னும் பொருளில்
வழங்குவது பெரும்பான்மை. ஆயினும் செந்தாமரை என்னும் பொருளில்
இங்கே எடுத்தாளப்பட்டுள்ளது. புண்டரீகாட்சன் என்பது விஷ்ணு சஹஸ்ர
நாமத்தில் 112வது திருநாமம் (தக்க-பரணி 22 குறிப்புரை 262 பக்கம்) (76)

5304.

‘தேண்டி நேர் கண்டேன்; வாழி ! தீது இலன் எம்
                                கோன்; ஆகம்
பூண்ட மெய்உயிரே நீ ! அப் பொய் உயிர் போயே
                                நின்ற
ஆண்தகைநெஞ்சில்நின்றும் அகன்றிலை; அழிவு
                                உண்டாமோ ?
ஈண்டு நீஇருந்தாய்; ஆண்டு, அங்கு, எவ் உயிர்
                               விடும் இராமன் ?

அம்மையே !

     தேண்டி நேர்கண்டேன் - தேடி வந்து உன்னைஎதிரே காணப்
பெற்றேன்; வாழி - வாழ்வாயாக; எம்கோன் - எம் தலைவனான
இராமபிரான்; தீது இலன் -  தீமை இலன்; நீ ஆகம் பூண்ட - நீ
இராமபிரான் மேனியில் அணிந்துள்ள; மெய் உயிரே - உண்மையான உயிரே
ஆவாய்; அப் பொய் உயிர் - அந்தப் பொய்யான உயிர்; போயே நின்ற -
போன பிறகும் நிலைத்துள்ள; ஆண்டகை - ஆடவருள் தலைசிறந்த
இராமபிரானின்; நெஞ்சில் நின்றும் - இதயத்தில் இருந்தும்; அகன்றிலை -
நீங்கினாய் இல்லை; அழிவு உண்டாமோ - அவனுக்கு அழிவு உண்டாகுமா;
ஈண்டு நீ இருந்தாய் - ((உயிரான நீ) இங்கே இருந்துள்ளாய்; இராமன் -
இராமபிரான்; ஆண்டு - அங்கே; எவ் உயிர் விடும் - எந்த உயிரை
விடுவான்.