| | சுந்தரி !நின்னைச் செய்த வஞ்சனை சொல்லச் சொல்ல, வெந்தன உலகம்என்ன, நிமிர்ந்தது சீற்ற வெந் தீ. |
சுந்தரி -குண அழகுபெற்றவளே; வந்து - சடாயுவின் பக்கத்தே வந்து(இராமபிரான்); அவன் மேனி நோக்கி - சடாயுவின் (போர்க்காயம் பெற்ற)திருமேனியைப் பார்த்து; வான் உயர் துயரின் வைகி - மிகப் பெரிய துன்பத்தில் ஆழ்ந்து; எந்தை - என்னுடைய தந்தையே; நீ உற்ற தன்மை - நீ துன்பமடைந்த காரணத்தை; இயம்பு என - கூறுக என்று சொல்ல (சடாயு); இலங்கை வேந்தன் - இலங்கை அரசனான இராவணன்; நின்னைச் செய்த -உனக்குச் செய்த; வஞ்சனை சொல்ல சொல்ல - வஞ்சகத்தை ஒவ்வொன்றாகஎடுத்துக் கூறுந்தொறும் கூறுந் தொறும்; சீற்ற வெந் தீ - இராமபிரானின்கோபமாகிய கொடிய நெருப்பு; உலகம் வெந்தன என்ன - உலகம் வெந்துபோயின என்று கூறும்படி; நிமிர்ந்தது - படிப்படியாக வளர்ந்தது. நின்னைச் செய்த- நினக்குச் செய்த - உருபு மயக்கம். சொல்லச் சொல்ல, சீற்றவெந்தீ நிமிர்ந்தது என முடிக்க. சொல்லும் தோறும் சொல்லும் தோறும் சீற்றத் தீ படிப்படியாக வளர்ந்தது. சொல்லச் சொல்ல பொருளொடு புணர்ந்த அடுக்கு. (79) | 5307. | ‘சீறி, “இவ் உலகம் மூன்றும் தீந்து உக, சின வாய் அம்பால் நூறுவென்” என்று,கை வில் நோக்கியகாலை, நோக்கி, “ஊறு ஒருசிறியோன் செய்ய, முனிதியோ உலகை ? உள்ளம் ஆறுதி” என்று,தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி. |
சீறி - சீற்றம் கொண்டு;இ - இந்த; உலகம் மூன்றும் - மூன்று உலகமும்; தீந்து உக - எரிந்து சாம்பலாய்ச் சிதற; சினவாய் அம்பால் - கோபத்தையும் தப்பாமையும் உடைய அம்பினாலே; நுறுவென் என்று - அழிப்பேன் என்று கூறி; (தன்னுடைய) கைவில் நோக்கிய காலை - கையில் உள்ள வில்லைப் பார்த்தபோது; தாதை - தந்தையாகிய சடாயு; நோக்கி - ஐயனைப் பார்த்து; ஒரு சிறியோன் ஊறு செய்ய - ஒரு அற்பன் தீமையைச் செய்ய; (அதற்காக) (ஒன்றும் அறியாத) உலகை முனிதியோ - உலகைச் சீறினாயோ ? (இது தகாது. |