பக்கம் எண் :

உருக் காட்டு படலம்391

ஆகையால்) உள்ளம்ஆறுதி - மனத்தில் அமைதி பெறுக; என்று
ஆற்றலின் -
என்று கூறி தணிக்கச் செய்ததால்; சீற்றம் ஆறி - கோபம்
தணிந்து.

     இதுவும் அடுத்தபாடலும் குளகம். தாதை என்றது சடாயுவை. ஒருவன்
துன்புறும் போது அதற்காகத் துடிக்காத உலகம் அழிய வேண்டும் என்று
அண்ணல் கருதினான். அவன் சடாயுவை நோக்கி ‘நீ இக்கோள் உறக்
குலுங்கல் செல்லா உலகங்கள்.... அழியத்தக்கன’ என்பான். அதற்கு சடாயு,
கூறியதை அறிக. (கம்ப. 3526) உரியவர் பால் சீற்றம் கொள். மற்றவரைப்
பழிப்பது பகைப்பது முறையல்ல என்றார்.                       (80)

5308.

‘ “எவ் வழி ஏகியுற்றான் ? யாண்டையான் ?
                          உறையுள் யாது ?
செவ்வியோய், கூறுக !” என்ன, செப்புவான் உற்ற
                          செவ்வி,
வெவ்விய விதியின் கொட்பால், வீடினன் கழுகின்
                           வேந்தன்;
எவ்விய வரி விற் செங் கை இருவரும், இடரின்
                             வீழ்ந்தார்.

(இராமபிரான்)

     செவ்வியோய் -செம்மைப்பண்புடையவளே ! அன்னான் - அநத்
இராவணன்; எவ்விழி ஏகி உற்றான் - எந்த வழியில் போனான்;
யாண்டையான் - அவன் தற்போது எங்கே உள்ளான்; உறையுள் யாது -
அவன் தங்கும் இடம் எது; கூறுக என்ன - கூறுவாயாக என்று கூற; கழுகின்
வேந்தன் -
கழுகுக்குல அரசனான சடாயு; செப்புவான் உற்ற செவ்வி -
அதற்கு மறுமொழி கூறத் தொடங்கும் போது; வெவ்விய - கொடுமையான;
விதியின் கொட்பால் - விதியின் சுழற்சியினாலே; வீடினன் - (சடாயு)
இறந்தான் (அதுகண்டு); எவ்விய - அம்புகளை ஏவும்; வரிவில் செங்கை -
கட்டமைந்த வில் ஏந்திய சிவந்த கையினை உடைய; இருவரும் - இராமனும்
இலக்குவனும்;  இடரின் வீழ்ந்தார் - துன்பத்தில் அழுந்தினர்.

     பிறன் பொருட்டுஉயிர் நீத்த பண்பு நோக்கிச் செவ்வியோய் ! என்று
சடாயு புகழப் பெற்றான். சம்பந்தப் பெருமான் விடைத்து வரும் இலங்கைக்
கோன் மலங்கச் சென்று இராமற் காய்ப் புடைத்தவனைப்