பொருது அழித்தான்என்பர். இப் பதிகம், கவிச்சக்கரவர்த்திக்கு மிகமிக உதவியமை அறிக. சம்பந்தர் ‘விடைத்துவரும் இராவணன்’ என்றார். கவிச்சக்கரவர்த்தி ‘வெங்கண் எரியப் புருவம் மீதுற விடைத்தான்’ (கம்ப. 3255) என்பர். மாரீசனை விடைத்து வந்த இராவணன் என்று திருமுறைக்குப் பொருள் கூற வேண்டும். சேக்கிழாருக்கு அடுத்த படி திருமுறை வல்லாளன் கம்பனே. இங்ஙனம் பலவுள. கம்பனுக்கு இராவணனின் முக்கோடி வாழ்நாளையும் வழங்கியது திருமுறைகளே. கடன் என்றது இறுதிச் சடங்கை. சேக்கிழார் பெருமான், நாவரசர் தாய் தந்தையர்க்குச் செய்த கடனை; மனம் தேற்றத் துயர் ஒழிந்து பெருவானம் அடைந்தாற்குச் செய்கடன்கள் பெருக்கினார் என்பர். இராமபிரான் தாதையாகிய சடாயுவுக்குச் செய்த இறுதிச் சடங்கு முன்பு பேசப் பெற்றது. ‘கார் அகில் ஈட்டத் தோடும் சந்தனம் குவித்து... தருப்பையும் பூவும் சிந்தினர் என்றும், ஏந்தினன் இருகை நன்றாய் ஏந்தினன் ஈமம் தன்மேல், சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனர் தலையின் சாரல் காந்து எரி காய மூட்டிக் கடன் முறை கடவா வண்ணம் நேர்ந்தனன்” என்றும் (கம்ப. 3536-37) என்று பெருமான் செய்த இறுதிக் கடன் கல்நெஞ்சும் உருகக் காட்டப் பெற்றது. தென்புலத்தார் கடன் புதல்வரால் நிறைவு செய்யப் பெறும்; புதல்வர் இன்றி இறந்த சடாயுவுக்கு இறைவனே புதல்வனாக வந்து இறுதிக்கடன் செய்தனன். இதனால் தியாகிகட்கு இறைவனே இறுதிக் கடனும் புரிவான் என்று அறிக.(81) | 5309. | ‘அயர்ந்தவர், அரிதின் தேறி, ஆண் தொழில் தாதைக்கு, ஆண்டு, செயத் தகுகடன்மை யாவும், தேவரும் மருளச் செய்தார்; “கயத் தொழில்அரக்கன்தன்னை நாடி, நாம் காண்டும்” என்னா, புயல் தொடுகுடுமிக் குன்றும், கானமும், கடிது போனார். |
அயர்ந்தவர் -மனம்சோர்ந்த இராமலக்குவர்கள்; அரிதின் தேறி - சிரமப்பட்டுத் தெளிந்து (அவர்கள்); ஆண் தொழில் தாதைக்கு - ஆண் மைத்தொழில் புரிந்த தந்தைக்கு; ஆண்டு செயத் தகு கடன்கள் யாவும் -அவ்விடத்துச் செய்ய வேண்டிய கடமைகள் யாவற்றையும்; தேவரும் மருள -தேவர்களும் வியந்து மருட்சியடைய; செய்தார் - செய்து நிறைவேற்றினர்(பிறகு) (இராமலக்குவர்கள்); கயத் தொழில் அரக்கன் தன்னை - கயமைத் |