பக்கம் எண் :

394சுந்தர காண்டம்

கலிநிலைத் துறை

5311.

‘கன்மத்தைஞாலத்தவர் யார் உளரே கடப்பார் ?
பொன் மொய்த்ததோளான், மயல் கொண்டு
                         புலன்கள் வேறாய்,
நல் மத்தைநாகத்து அயல் சூடிய நம்பனேபோல்,
உன்மத்தன்ஆனான், தனை ஒன்றும்
                        உணர்ந்திலாதான்.

     பொன் மொய்த்ததோளான் - திருமகள் தங்கியதோள்களை உடைய
இராமபிரான்; ஒன்றும் - சிறிதும்; தனை உணர்ந்திலாதான் - தன்னை
அறிந்து கொள்ளாமல்; மயல் கொண்டு - பிராட்டியின் பால் காதல் மிகுந்து;
புலன்கள் வேறு ஆய் -
ஐம்புலன்களும் நிலைதிரிந்து (உமையைப் பிரிந்த);
நல்மத்தம் -
நல்ல ஊமத்தம் பூவையும்; நாகத்து அயல் - பாம்பின்
அருகில்;சூடிய - அணிந்த; நம்பனே போல் - சிவபிரானைப் போல;
உன்மத்தன்ஆனான் -
பித்தம் பிடித்தவன் ஆனான்;(ஆகையால்)
ஞாலத்தவர் - உலகில்உள்ளவர்களுள்; கன்மத்தை - வினையின்
நுகர்ச்சியை; கடப்பார் - வெற்றிகொண்டவர்; யார் உளர் - எவர்
உள்ளனர்.

     கடப்பார் -வெற்றி கொள்பவர். கடப்பார் எவரோ கருவினையை என்பர்
புகழேந்தியார். மொய்த்தல் - தங்குதல் (இருத்தல்) மொய்த்தல் என்பது
கொடுத்தலும் இருத்தலும் (அகராதி நிகண்டு. மொம் முதல் 5) சிவபிரானைப்
பித்தன் என்று பேசுவது மரபு.                               (84)

5312.

‘ “போது ஆயினபோது, உன தண் புனல் ஆடல்
                               பொய்யோ ?
சீதா, பவளக்கொடி அன்னவள்-தேடி, என்கண்
நீ தா;தருகிற்றிலையேல், நெருப்பு ஆதி !” என்னா,
கோதாவரியைச்சினம் கொண்டனன், கொண்டல்
                               ஒப்பான்.

     கொண்டல்ஒப்பான் - மேகம் போன்றஇராமபிரான்; கோதாவரியை
-
கோதாவரியைப் பார்த்து (நதியே); போது ஆயின போது - சூரியன்
உதிக்கும் சமயத்தில்; பவளக்கொடி அன்னவள் சீதை - பவளக்கொடி
போலும் சீதை; உன தண்புனல் - உன்னுடைய குளிர்ந்த நீரில்; ஆடல்
பொய்யோ -
நீராடியது பொய்யா; அன்னவள் தேடி - அவளைத் தேடிக்
கொண்டு வந்து; என்கண் நீ தா -