பொன்மான்உருவால் - (அரக்கன்) பொன் போலும் மான் வடிவத்தால்; சில மாயை புணர்க்க அன்றோ - சில மாயைகளைச் செய்ததனால் அல்லவா; என்கண் - என்னிடத்திலிருந்து; என்மான் - என்னுடைய மான் போன்ற சீதை; இப்பொழுது - இந்தச் சமயத்தில்; அகல்வுற்றனள் - பிரிந்து சென்றனள்; என்னா - என்று கூறி; நன் மான்களை நோக்கி - பிறர்க்குத் தீங்கு செய்யாத மான்களைப் பார்த்து; இன்றே - இன்றைய தினமே; வில் மாண் கொலை வாளியின் - வில்லிலே மாட்சிமைப் பட்ட கொலைத் தொழில் செய்யும் அம்பாலே; நும் நாமமும் - உங்களுடைய பெயரையும்; மாய்ப்பேன் - அழிப்பேன்; என்று வெகுண்டு நின்றான் - என்று கூறிச் சீறி நின்றான். புணர்த்த -செய்ய. தூமமென் குழலியர் புணர்த்த சூழ்ச்சியால் (திருவவதாரம் 47) ‘வில் மாண்’ என்று பாடம் கொள்வாரும் உளர். வில்மாண் - வில்லுக்குச் சுவாமியான இராமன் என்பது பழைய உரை. (87) | 5315. | ‘வேறுற்ற மனத்தவன், இன்ன விளம்பி நோவ, ஆறுற்ற நெஞ்சின்தனது ஆர் உயிர் ஆய தம்பி கூறுற்ற சொல்என்று உள கோது அறு நல் மருந்தால் தேறுற்று, உயிர்பெற்று, இயல்பும் சில தேறலுற்றான். |
வேறு உற்றமனத்தவன் - வேறுபட்ட மனத்தை உடையஇராமபிரான்; இன்ன - இப்படிப்பட்டவற்றை; விளம்பி நோவ - சொல்லி வருத்தம் அடைய(அப்போது); ஆறு உற்ற - ஆறுதலைப் பெற்ற; நெஞ்சின் - மனத்தைஉடைய; தனது ஆர் உயிர் ஆய - தனது அரிய உயிர் போன்ற; தம்பி -தன்னுடைய தம்பியான இலக்குவன்; கூறுற்ற - எடு்த்துக்கூறிய; சொல் என்றுஉள - சொற்கள் என்று உள்ள; கோதறு - குற்றம் அற்ற; நல் மருந்தால் -நல்ல மருந்தினால்; தேறுற்று - தெளிவு பெற்று; உயிர்பெற்று - வலிமைபெற்று; சில இயல்வும் - சில உபாயங்களையும்; தேறல் உற்றான் -ஆராயத் தொடங்கினான். உயிர்பெற்று -வலிமைபெற்று. உயிர் படைத்து.. ஓடல் உற்றது வடவைத்தீ (வருணனை 56) கம்பன் கழகம், உயிர் - வலிமை என்று விளக்கிற்று இயல்வு - உபாயம். வேள்வியும் நல் அறமும் இயல்பு (முதல் - அந் - 12) இவ்வுரையும் மேற்கோளும் வழங்கியது அண்ணாமலை |