பக்கம் எண் :

உருக் காட்டு படலம்397

கழகப்பதிப்பு. உபாயம்என்றது பிராட்டியைத் தேடுவதற்கு மேற்கொள்ள
வேண்டிய நெறியை. ஆர் உயிராய தம்பி என்ற தொடரையும், ‘தம்பியர்
அல்லது தனக்கு வேறு உயிர் இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்’
(கம்ப. 3969) என்னும் அடிகளையும் ஒப்பிடுக.                      (88)

5316.

‘வந்தான்இளையானொடு, வான் உயர் தேரின்
                                   வைகும்
நந்தாவிளக்கின் வரும் எம் குல நாதன் வாழும்
சந்து ஆர் தடங்குன்றினில்; தன் உயிர்க்
                                   காதலோனும்
செந் தாமரைக்கண்ணனும், நட்டனர் தேவர் உய்ய.

(இராமபிரான்)

     வான் உயர் -விண்ணில் உயர்ந்துள்ள; தேரின் வைகும் - தேரிலே
வீற்றிருக்கும்; நந்தா விளக்கின் வரும் - குறைவுபடாத சூரியன் பால் உதித்
த;எம்குல நாதன் வாழும் - எமது குலத்தவனான சுக்கிரீவன்  தங்கிய;
சந்துஆர் -
சந்தன மரங்கள் செறிந்த; தடங்குன்றினில் - பெரிய இருசிய
மூகமலையில்; இளையானொடு வந்தான் - இளைய பெருமாளுடன் வந்தான்;
(அங்கு) செந்தாமரைக் கண்ணனும் - தாமரை போன்ற கண்களை உடைய
இராமபிரானும்; தன் உயிர்க்காதலோனும் - தன்னுடைய உயிர் மேல்
அன்புள்ள சுக்கிரீவனும்; தேவர் உய்ய - தேவர்கள் வாழ்வு பெற; நட்டனர்
-
நட்புப் பூண்டனர்.

     நந்தா விளக்கு -சூரியன். வருதல் - தோன்றுதல் (பிறத்தல்) தசரதன்
மதலையாய் வருதும் (திரு அவதாரம்) சந்து -  சந்தனம். அந்துவன் பாடிய
சந்து செழு நெடுவரை  (அகம் 59) தாமரைக்கண்ணன் - திருமால்
(இராமபிரான்) தன்உயிர்க்காதலோன் - சுக்கிரீவன் - தன்னுடைய உயிர்மேல்
ஆசை வைத்தவன்வாலிக்குப் பயந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள
ரிசியமுகபர்வதம் வந்தவன்என்ற வரலாறு காண்க.               (89)

5317.

‘உண்டாயதும், உற்றதும், முற்றும் உணர்த்தி, உள்ளம்
புண்தான் எனநோய் உற விம்முறுகின்ற போழ்தின்,
எண்தான் உழந்துஇட்ட நும் ஏந்து இழை, யாங்கள்
                                     காட்ட,
கண்டான், உயர்போதமும் வேதமும் காண்கிலாதான்.