பக்கம் எண் :

உருக் காட்டு படலம்399

யானது; பண்டு உண்டு- முன்பே உள்ளது; ஆயினும் - எங்கனம்
ஆராய்ந்து; பேர்ப்பது அன்று - போக்கத்தக்கது அன்று; தன்மை -
அப்பிணியின் தன்மை; தணிகின்ற நம் சொல் - தாழ்ந்த நம் சொல்லால்;
தொடர் தன்மையது அன்று - பின்பற்றிச் சொல்லும் தன்மையுடையது
அன்று.

    பிரிவாற்றாமையால் இதயத்தில் உள்ள அவலத்தைப் பிணி கொண்டது;
அப்பிணி அமுதத்தைத் தெளித்தாலும் மாறாதது. அது பேர்ப்பது அன்று என்க.
                                                          (91)

5319.

‘அயர்வு உற்று, அரிதின் தெளிந்து, அம் மலைக்கு
                             அப் புறத்து ஓர்
உயர் பொன்கிரி உற்று உளன், வாலி என்று ஓங்கல்
                             ஒப்பான்,
துயர்வு உற்று அவ்இராவணன் வாலிடைப் பண்டு
                             தூங்க,
மயர்வு உற்றபொருப்பொடு, மால் கடல் தாவி
                             வந்தான்.

     அயர்வு உற்று -சோர்ந்து; அரிதின் தெளிந்து - மிகவும்
சிரமப்பட்டுத் தெளிந்து (இவை இராமன் நிலை); அம்மலைக்கு - அந்த
இருசியமுக மலைக்கு; அப்புறத்து ஓர் - அந்தப் பக்கத்தில் உள்ள ஒரு;
உயர் - உயர்ந்த; பொன்கிரி உற்றுளன் - அழகிய மலையில் இருப்பவனும்;
வாலி என்று ஓங்கல் ஒப்பான் - வாலி என்னும் பெயருடன் மலையை
ஒத்திருப்பவனும்; துயர்வு உற்று - துன்பம் அடைந்து; அவ் இராவணன் -
அந்த இராவணன்; வாலிடை - தன் வாலின்கண்ணே; பண்டு தூங்க - முன்பு
தொங்கும்படி (பிணித்து); மயர்வுற்ற - மயக்கம் அடைந்த; பொருப்பொடு -
மலைகளையும்; மால் கடல் - பெரிய கடல்களையும்; தாவி வந்தான் - தாவி
வந்தவனும்.                                             (92)

5320.

‘ஆயானை, ஓர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி,
                                 அன்பின்
தூயான்வயின்,அவ் அரசு ஈந்தவன், “சுற்று சேனை
மேயான் வருவான்”என விட்டனன்; மேவுகாறும்
ஏயான்,இருந்தான், இடைத் திங்கள் இரண்டு
                                இரண்டும்.