பக்கம் எண் :

உருக் காட்டு படலம்405

இரண்யனும் பூதம்நான்குடைய ஆற்றலான் என்று வாலியும் புகழப்படுவர்.
                                                     (100)

5328.

ஒத்து உயர்கனக வான் கிரியின் ஓங்கிய
மெய்த் துறுமரம்தொறும் மின்மினிக் குலம்
மொய்த்துஉளவாம் என, முன்னும் பின்னரும்,
தொத்தின்தாரகை, மயிரின் சுற்று எலாம்.

     உயர் கனகவான்கிரியின் - சிறந்த பொன்மயமானமகாமேருமலையில்;ஒத்து - ஒன்றுக்கொன்று சமமாகி; ஓங்கிய -
வளர்வதற்காக; துறுமெய் -நெருங்கிய வடிவத்தை உடைய; மரந்தொறும் -
மரங்கள் தோறும்; மின்மினிக்குலம் - மின்மினிக் கூட்டம்; மொய்த்து
உளவாம் என -
நெருங்கியிருப்பதைப் போல; தாரகை - நட்சத்திரங்கள்;
மயிரின் சுற்றுஎலாம் -
(விசுவ ரூபம் எடுத்த) அனுமனின் மேனியில்;
முன்னும் பின்னரும்-
உள்ள மயிர்களின் சுற்றிடங்களில் எல்லாம்
முன்னாலும் பின்னாலும்;தொத்தின் - தொத்திக் கொண்டிருந்தன.

    மின்மினிக்குலம்என தாரகை தொத்தி்ன என்று முடிக்க அண்ணல்
மேனி மேரு. மயிர். மரம். நட்சத்திரம் மின்மி்னி என்க தொறும் பன்மைப்
பொருள் உணர்த்தி வந்தது. இடைச் சொல் ‘நவில் தொறும் நூல் நயம்’ (குறள்.
783) என்பது தமிழ்மறை. மெய் - வடிவம். ‘மானவன் மெய் இறை
மறக்கலாமையின்’ (கம்க. 3636)                               (101)

5329.

கண்தலம்அறிவொடு கடந்த காட்சிய,
விண்தலம் இருபுடை விளங்கும் மெய்ம்மைய,
குண்டலம்இரண்டும், அக் கோளின் மாச் சுடர்
மண்டலம்இரண்டொடும், மாறு கொண்டவே.

     அறிவொடு -மக்களின்அறிவையும்; கண்தலம் - கண்களையும்;
கடந்த காட்சிய -
கடந்துள்ள காட்சியை உடையனவும்; விண்தலம் -
ஆகாயத்தின்; இருபுடை - இரண்டு பக்கங்களிலும்; விளங்கும் மெய்ம்மைய
-
பிரகாசிக்கும் இயல்பை உடையனவும்; (ஆன) குண்டலம் இரண்டும் -
அனுமனின் இரண்டு குண்டலங்களும்; அக்கோளின் - அந்த
நவக்கிரங்களுக்குள்ளே; மாச்சுடர் - மிக்க ஒளியுடன் கூடிய; மண்டலம்
இரண்டொடும் -
இரண்டு சூரிய சந்திர மண்டலங்களுடன்; மாறு
கொண்டவே -
மாறுபாடு கொண்டுள்ளன.