| | அண்டம்என்றதின் உறை அமரர் யாரையும் கண்டனன்,தானும், தன் கமலக் கண்களால். |
எண்திசைமருங்கினும் - எட்டுத் திசைகளின்எல்லையிலும்; உலகம் யாவினும் - எல்லா உலகங்களிலும்; தண்டல் இல் - இடம் விட்டுப் பெயராத;உயிர் எலாம் - உயிர்க்கூட்டங்கள் முழுவதும்; தன்னை நோக்கின -அனுமனைப் பார்த்தன; தானும் - அந்த அனுமனும்; தன் - தன்னுடைய;கமலக் கண்களால் - தாமரை போலும் கண்களால்; அண்டம் என்றதின்உறை - மேலுலகம் என்று கூறப்படுவதில் வாழும்; அமரர் யாரையும் -எல்லாத் தேவர்களையும்; கண்டனன் - நேரே பார்த்தான். அனுமன் எல்லாஇடங்களிலும் வியாபித்து இருந்தமையால் உயிர்கள் அவனைக் கண்டன. உயர்ந்து இருந்தமையால் அவன் தேவரைக் கண்டான். இதனால் பெருக்கமும் உயரமும் பேசப்பட்டது. மருங்கு - எல்லை. ‘மருங்கு அறிவாரா மலை’ (கலி 48) இனியர் உரை காண்க. (104) | 5332. | எழுந்துஉயர் நெடுந்தகை இரண்டு பாதமும் அழுந்துறஅழுத்தலின், இலங்கை ஆழ் கடல் விழுந்தது;நிலமிசை விரிந்த வெண் திரை தழைந்தன;புரண்டன மீனம்தாம் எலாம். |
எழுந்து - நிமி்ர்ந்து; உயர் - உயர்கின்ற; நெடுந்தகை - பெருந்தகையான அனுமனின்; இரண்டு பாதமும் - இரண்டு திருவடிகளும்; அழுந்து உற - ஆழத்தில் புக; அழுத்தலின் - அழுத்திய காரணத்தால்; இலங்கை - இலங்கையானது; ஆழ் கடல் - ஆழமான கடலில்; விழுந்தது - மூழ்கியது; விரிந்த வெண்திரை - பரந்த வெண்மையான கடல் அலைகள்; நிலமிசை - பூமியின் கண்; தழைந்தன - பெருகின; மீனம் எலாம் - எல்லா மீன்களும்; புரண்டன - (அங்கங்கே) துள்ளின. அனுமனின்திருவடிகள் அழுத்திய காரணத்தால் இலங்கை கடலில் மூழ்கியது. கடல் அலைகள் பூமியில் பெருகின. மீன்கள் துள்ளின. இது கற்பனை, நிகழ்ச்சியன்று. நெடுந்தகை என்பதற்குச் சாமுண்டி தேவ நாயகர் அளத்தற்கரிய தன்மை உடையாய் என்று விளக்கம் செய்தார்’ அரவணையாய் என்னும் நெடுந்தகை நின்னையே யாம்’ (புறப்பொருள் 191) (105) |