அடையாமல்; ஊழிபலவும் - பல யுகங்களும்; நிலை நிறுத்தற்கு - நிலைத்துநிற்பதற்கு; ஒருவன் நீயே - ஒப்பற்ற நீயே; உளை ஆனாய் - (தகுதி)உள்ளவன் ஆனாய்; நின் பெருமைக்கு ஏற்ப - உன்னுடைய விசுவரூபத்துக்குப் பொருத்தமாக; பகை இலங்கை - உலகத்தின் பகையான இலங்கையானது; ஏழு கடற்கும் - ஏழு சமுத்திரங்களுக்கும்; அப் புறத்தது - அப்பால் இருப்பதாக; ஆகாதது - அமையாமல்; இருந்தது - (ஒரு கடலின் நடுவில்) இருப்பது; இழிவு அன்றோ - (உன் சிறப்புக்கு) தாழ்வு அல்லவா. அனுமனின்வீரத்துக்கு ‘உரைகல்’ ஒரு கடல் கடந்ததன்று. அவன் ஏழு கடலைக் கடந்தால்தான் அவன் வீரம் சரியாக உணரப்படும் என்பது குறிப்பு. (110) | 5338. | ‘அறிவும் ஈதே, உரு ஈதே, ஆற்றல் ஈதே, ஐம் புலத்தின் செறிவும் ஈதே,செயல் ஈதே, தேற்றம் ஈதே, தேற்றத்தின் நெறியும் ஈதே,நினைவு ஈதே, நீதி ஈதே, நினக்கு என்றால், வெறியர்அன்றோ, குணங்களான் விரிஞ்சன் முதலாம் மேலானோர் ? |
(அனுமனே) நினக்கு -உனக்கு;அறிவும் ஈதே - ஞானமும் இதுவேயாகும்; உரு ஈதே - அழகும் இதுவேயாம்; ஆற்றல் ஈதே - வலிமையும் இதுவேயாம்; ஐம்புலத்தின் செறிவும் ஈதே - ஐம்புலன்களின் அடக்கமும் இதுவேயாகும்; செயல் ஈதே - செய்கையும் இதுவேயாகும்; தேற்றம் ஈதே - தெளிவும் இதுவேயாகும்; தேற்றத்தின் நெறியும் ஈதே - தெளிவு மேற்கொள்ளும் வழியும் இதுவேயாகும்; நினைவு ஈதே - எண்ணமும் இதுவேயாகும்; நீதி ஈதே - நீதியும் இதுவேயாகும்; என்றால் - என்று அமையுமானால்; விரிஞ்சன் முதலாம் மேலானோர் - பிரமன் முதலான தேவர்கள்; குணங்களால் - பண்புகளால்; வெறியர் அன்றோ - வெறுமையானவர்கள் அல்லவா. ஈதே, ஈதே என்றுதிரும்பத் திரும்பப் பேசப்பட்டது, அனுமன் பேருரு. அவன் பேருருவுக்கும் அறிவு முதலானவற்றுக்கும் வேறுபாடில்லை. பண்பும் பண்பியும் ஒன்றாயிற்று. அனுமன் கொண்ட |