வடிவம் பெரியது.அதுபோல் அவனுடைய அறிவு முதலான குணங்களும் பெரியன. பிரமன் முதலானவர்களுக்கு இங்ஙனம் அமையாமையின் அவர்கள் சூனியம் (வெறியர்) ஆயினர். ‘ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் வேற்றுமை இவனோடு இல்லை (கம்ப. 3767) என்று பிரான் முன்பு பேசுகிறான்; பிரான் பேசியதையே பிராட்டி விளக்கமாகப் பேசினாள். இருவர் உள்ளமும் ஒன்றென்பர். இருவரும் ஒன்றென அறிதல் நன்று. சக்தியும் சிவமும் ஒன்றுதானே. விளக்கம் வேண்டா. (111) | 5339. | ‘மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீ்க்கம் நோக்கி, வீரற்குப் பின்னேபிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி, உன்னாநின்றேஉடைகின்றேன், ஒழிந்தேன் ஐயம்; உயிர் உயிர்த்தேன்; என்னே ? நிருதர்என் ஆவர், நீயே எம் கோன் துணை என்றால்? |
(அனுமன்) மின்நேர்எயிற்று - மின்னைப் போலும் பற்களையுடைய; வல் அரக்கர் - வலிமை மிக்க அரக்கர்களின்; வீக்கம் நோக்கி - பெருக்கத்தைப் பார்த்து; வீரற்கு - இராமபிரானுக்கு; பின்னே பிறந்தான் அல்லது - பி் ன்னேதோன்றிய இலக்குவனே அல்லாமல்; ஓர் துணையிலாத - வேறு ஒரு உதவியாளன் இல்லாத; (பெருமானுக்கு யாதாகுமோ என்று) உன்னா நின்றேன் - ஆலோசனை செய்து; உடைகின்றேன் - மனம் உடைந்து போன யான்; ஐயம் ஒழிந்தேன் - ஐயப்பாடு நீங்கினவள் ஆனேன்; உயிர் உயிர்த்தேன் -உயிர் தழைக்கப் பெற்றேன்; நீயே - சிறப்பின் வடிவமான நீயே; எம் கோன்துணை என்றால் - எம் பெருமானின் உதவியாளனாக அமைந்தாய் என்றால்;நிருதர் என்னாவர் - அரக்கர்கள் என்ன பாடுபடுவார்கள்; என்னே - என்னஆச்சரியம். கான் உறைவாழ்க்கை கலந்த இராமன். தலைமகற் பிரிந்த தனிமையன். தனாது சுற்றமும் சேண்மையதுவே. முற்றியது. வெண்கோட்டுக் குன்றம் எடுத்த மீளி வன் தோள் ஆண்டகை ஊரே; அன்றே சொல் முறை மறந்தனம் வாழி வில்லும் உண்டு அவற்கு அந்நாள் ஆங்கே. என்னும் சங்கராமாயணம் இங்கே நினைவுக்கு வருகிறது (புறத்திரட்டு 1332) ‘தருமத்தின் தனிமை தீர்ப்பான்’ (கம்ப. 3781) |