- ; இடபன் - ;குமுதாக்கன் - ; பனசன் - ; சரபன் - ; நெடுஞ்சாம்பன் - நீண்ட ஆயுளையுடைய சாம்பன்; காலன் அனைய - யமனைப் போலும்; துன்மருடன் - ; காம்பன் - ; கவயன் - ; கவயாக்கன் - ; ஞாலம் அறியும் நளன் - உலகத்தாரால் அறியப்பட்ட நளன்; சங்கன் - ; விந்தன் -; துமிந்தன் - ; மதன் என்பான் - மதன் என்று கூறப்படுபவன். வாலியின் தம்பியாகிய சுக்கிரீவன்... மதன் இப்பாடலும் அடுத்த பாடலும் ஒரு தொடர். மயிந்தன் துமிந்தன் இரட்டையர். குமுதன் ஆம்பல் மலர் போலும் நிறமுடையவன். இடபன் - காளை போல்பவன். குமுதாக்கன் - ஆம்பல் போலும் கண்களைப் பெற்றவன். சரபன் - சரபப் பறவை போன்றவன். நீண்ட ஆயுள் பெற்றவன் ஆகையால் நெடுஞ்சாம்பன் என்று பேசப்பட்டான். துன் மருடன் - பொறுக்கவொண்ணாச் சீற்றத்தான் கவயன் - காட்டுப் பசுப் போல்பவன். கவயாட்சன் - காட்டுப் பசுவின் கண் பெற்றவன். சங்கன் - சங்கு போலும்நிறமுடையவன். (116) | 5344. | ‘தம்பன்,தூமத் தனிப் பெயரோன், ததியின் வதனன், சதவலி என்று இம்பர் உலகோடுஎவ் உலகும் எடுக்கும் மிடுக்கர், இராமன் கை அம்பின் உதவும்படைத் தலைவர்; அவரை நோக்கின், இவ் அரக்கர், வம்பின்முலையாய் ! உறை இடவும் போதார்; கணக்கு வரம்பு உண்டோ ? |
வம்பின்முலையாய் - கச்சணிந்த தனங்களைஉடைய அம்மையே; தம்பன் - ; தூமத் தனிப் பெயரோன் - தூமன் என்ற ஒப்பற்ற பெயரை உடையவன்; ததியின் வதனன் - ததிமுகன்; சதவலி - ; என்று - என்று; இம்பர் உலகோடு - இந்த உலகத்தையும்; எவ்வுலகும் - எந்த உலகத் தையும்;எடுக்கும் மிடுக்கர் - சுமக்கின்ற ஆற்றலுடையவர்; (அவர்கள்) இராமன் -இராமபிரானின்; கை அம்பின் - கையிலுள்ள அம்பைப் போல; உதவும் -(ஏவியதைச் செய்ய) உதவுகின்ற; படைத்தலைவர் - சேனைத்தலைவர்கள்; கணக்கு வரம்பு உண்டோ - அவர்களின் எண்ணிக்கைக்கு எல்லை உள்ளதா? அவரை நோக்கின் - அப்படைத் தலைவர்களைப் பார்க்கும்போது; இவ்அரக்கர் - இந்த அரக்கர்கள்; உறையிடவும் போதார் - உறையாகவைப்பதற்கும் போதமாட்டார்கள். |