பக்கம் எண் :

422சுந்தர காண்டம்

 

விலங்கினரைநூறி, வரி வெஞ் சிலையினோர்தம்
பொலங் கொள்கழல் தாழ்குவென்; இது, அன்னை !
                            பொருள் அன்றால்.

     அன்னை ! -தாயே(நீ); இலங்கையொடும் ஏகுதி - இலங்கையுடன்
என்னைக் கொண்டு செல்; என்னினும் - என்று கட்டளையிட்டாலும்; இடந்து
-
(இலங்கையை) பெயர்த்து (அதனை); என் - என்னுடைய; வலம்கொள் -
வலிமை கொண்ட; ஒரு கைத் தலையில் - ஒரு கையின் கண்ணே; வைத்து -
வைத்துக் கொண்டு; எதிர் - என் முன்னே; தடுப்பான் - தடுக்கும்
பொருட்டு;விலங்கினரை - குறுக்கிடுபவரை; நூறி - அழித்து (பிறகு); வரி -
கட்டமைந்த; வெம்சிலையினோர்தம் - கொடிய வில்லேந்திய
இராமலக்குவர்களின்; பொலங்கொள் கழல் - அழகிய வீரக்கழல் அமைந்த
திருவடியை; தாழ்குவென் - வணங்குவேன்; இது - இச் செயல் (எனக்கு);
பொருள் அன்று - பெருஞ்செயல் அன்று. (எளிய செயல்).

     இச்செயல் எனக்குஅருஞ்செயல் அன்று. எளிய செயல், என்னும்
ஆழ்ந்த கருத்தை உட்கொண்ட ‘பொருள் அன்று’ என்னும் தொடர்
ஆழமானது. மணிவாசகர் ‘பொருளா, என்னை புகுந்தாண்ட பொன்னே !
என்பர் (திருவாசகம் 383)’ நிற்கு இது பொருள் என உணர்கிலேன்’ என்று
இராமனைக் கவுசிகன் பாராட்டுவான் (கம்ப. 449)                   (5)

5350.

‘அருந்ததி! உரைத்தி-அழகற்கு அருகு சென்று,
                                       “உன்
மருந்து அனையதேவி, நெடு வஞ்சர் சிறை
                                    வைப்பில்,
பெருந்துயரினோடும், ஒரு வீடு பெறுகில்லாள்,
இருந்தனள்” எனப்பகரின், என் அடிமை என் ஆம் ?

     அருந்ததி -அருந்ததியே (யான்); அழகற்கு அருகு சென்று -
இராமபிரான் பக்கலிலே போய்; உன் - உன்னுடைய; மருந்து அனைய தேவி
-
அமுதம் போலும் தேவியானவள்; நெடு வஞ்சர் - மிக்க வஞ்சகக்
குணமுடையவர்களின்; சிறை வைப்பில் - சிறையிடத்தில்;
பெருந்துயரினோடும் -
பெரிய துன்பத்துடன்; ஒரு - ஒப்பற்ற; வீடு
பெறுகில்லாள் -
விடுதலை பெறாதவளாய்; இருந்தனள் - இருந்தாள்; எனப்
பகரின் -
என்று கூறினால்; என்