கீழ்மையான்- இழிந்த பண்புடைய இராவணன்; தீண்டினான் எனின் -என்னைத் தொட்டிருப்பானேயானால்; இத்தனை சேண் பகல் - இவ்வளவு நீண்ட நாட்கள்; உயிர் - இராவணனின் உயிரானது; மெய்யின் ஈண்டுமோ - அவன் உடலில் தங்கியிருக்குமா ?; (இராவணன்) இமைப்பின் முன் - கண் இமைக்கும் நேரத்தில்; மாண்டு தீர்வென் என்றே - அழிந்து ஒழிவேன் என்று கருதியே; வன்மையால் - பேராற்றலால்; நிலம் - யான் இருந்த பூமியை; கீண்டு கொண்டு - பெயர்த்து எடுத்துக் கொண்டு; ஏகினன் - இலங்கைக்குச் சென்றான். இராவணன்என்னைத் தொட்டிருந்தால் என் உடம்பில் உயிர் இருக்குமா; நான் இறந்து படுவேன் என்று கருதித்தான் என்னை நிலத்துடன் பெயர்த்து வந்தான் என்றும் பொருள் கொள்ள இடம் உண்டு. இராவணன் தனக்கு அழிவு வாராதிருத்தலையே எண்ணினான் என்பதை அடுத்தபாடல் உறுதி செய்கிறது. அனுமன், என் தோளில் ஆரோகணித்தலை வெறுத்தாய். ஆனால் இராவணன் உன்னை எப்படிக் கொணர்ந்தான் என்று கேட்டால் என்ன செய்வதென்று கருதி இங்ஙனம் பேசினாள் என்று கூறும் மரபு உண்டு. (20) | 5365. | ‘ “மேவு சிந்தை இல் மாதரை மெய் தொடின், தேவு வன் தலைசிந்துக நீ” என, பூவில் வந்தபுராதனனே புகல் சாவம் உண்டு;எனது ஆர் உயிர் தந்ததால். |
மேவு சிந்தை இல்- உன்பால் பொருந்தும் மனம் இல்லாத; மாதரை -பெண்களை; மெய்தொடின் - உடலைத் தொட்டால்; தேவு வன்தலை - தெய்வத்தன்மை பெற்ற வலிய தலைகள்; சிந்துக - சிதறப்படுவனவாகுக; தீது என - (அது) பாவம் என்று; பூவின் வந்த - தாமரைப் பூவிலே தோன்றிய; புராதனனே புகல் - பழையோனான பிரமனால் கூறப்பட்ட; சாவம் உண்டு - சாபம் இராவணனுக்கு உள்ளது; (அச்சாபம்) எனது ஆருயிர் - எனது அரிய உயிரை; தந்தது - பாதுகாத்தது. மாதரை -என்பதில் உள்ள ‘ஐ’யை அசையாக்கி ‘மாதர்மெய்’ என்று சேர்த்துப் பொருள் கொள்ளலாம். அப்போது மாதருடைய என்று பொருள் தரும். சிந்தாமணியில் 2605 ஆம் பாடலில் புகழானை நாண மொழிகள் பல கூறி உள்ள தொடரில் உள்ள ‘ஐ’யை அசையாக்கினார் இனியர். (புகழான் நாண மொழிகள் கூறி என்பது பொருள்) தீது - பாவம் உள்ளத்தால் உள்ளலும் தீதே (திருக்குறள் 282) தேவுதலை - என்பதற்கு |