தூய்மையை உலகத்துக்குஉணர்த்தவும்; இத்துணை - இத்தனை நாட்கள்; தூங்கினேன் - (இறவாமல்) தாமதித்தேன்; அது அன்றெனில் - அச்சாபம் உண்மை அல்லாமற் போனால்; மன்ற மாய்வென் - நிச்சயமாக இறந்திருப்பேன். ஆயதுஉண்மையினானும் என்று பிரித்து பொருள் சொன்னார் சிலர் நானும் என்பதில் உள்ள ‘உம்’ மும் அசையானால் வாக்கியம் பிழை நேராது. உம் அசையாக வருதலை சிந்தாமணி 1173 ஆம் பாடல் உணர்த்தும். சாபம் உண்மையாக இருப்பினும் பொய்மையாக இருப்பினும் யான் மாய்வென். ஆனால் இராமபிரானின் வலிமை எண்ணி, என்னுடைய தூய்மையைக் காட்ட இறவாமல் காலதாமதம் செய்தேன் என்ற பொருள் கொள்ள வேண்டும். தருமத்தை நான் காப்பாற்ற வேண்டா, பிராட்டி பேசியதாகப் பொருள் கொள்ள வேண்டும். என்னுடை என்று வரவேண்டியது நானுடை என்ற வந்தது. ‘நானுடைத் தவத்தால்’ என்று திருமங்கையாழ்வாரும், நானுடை எம்பெருமான் என்று சுந்தரரும் பாடினர். (23) | 5368. | ‘ஆண்டுநின்றும், அரக்கன் அகழ்ந்து கொண்டு, ஈண்டுவைத்தது, இளவல் இயற்றிய நீண்ட சாலையொடுநிலைநின்றது; காண்டி, ஐய !நின் மெய் உணர் கண்களால். |
ஆண்டு நின்று -அந்தப்பஞ்சவடியிலிருந்து; அரக்கன் - இராவணனால்; அகழ்ந்து கொண்டு - பெயர்த்துக் கொண்டு வந்து; ஈண்டு வைத்தது - இந்த இலங்கையில் வைக்கப்பெற்ற பூமியானது; இளவல் இயற்றிய - இளைய பெருமானால் அமைக்கப்பெற்ற; நீண்ட சாலையொடு - பெரிய பர்ணசாலையுடன்; நிலை நின்றது - நிலையாக இருப்பதை; ஐய - தந்தையே; நின் - உன்னுடைய; மெய் உணர் கண்களால் - சத்தியத்தைத் தரிசிக்கும் விழிகளாலே; காண்டி - பார்ப்பாயாக. அரக்கன், இளவல்இயற்றிய சாலையொடு அகழ்ந்து கொண்டு ஈண்டு வைத்தது. (அது) நிலை நின்றது. காண்டி என்றும் கூட்டிப் பொருள் கூறலாம். ‘தம்பியால் சமைக்கப்பட்ட இனிய பூஞ்சாலை (கம்ப. 2738) சூர்ப்பணகைப் படலம் பேசும். இங்கு அதனை பிராட்டி மறவாமல் பேசினாள். இலக்குவன் அமைத்த சாலையைச் சித்திரகூடத்தில் கண்டோம். அது ‘தம்பி கோலிய சாலை’ என்று பேசிற்று. அங்கு (கம்ப. 2089 - 2092) நான்கு பாடல்கள் அதை விவரிக்கும். (24) |