பக்கம் எண் :

சூடாமணிப் படலம்437

நகர்த் தாயாரின்பெயர் பெருந்தேவி என்பது. கொங்குவேள் உடன்முடி
கவித்தகடன் அறி கற்பின் இயற்பெருந்தேவி (பெருங்கதை 2.4.23.24) என்பர்.
தேவியே உன் தவத் தொழில் சிறந்தது என்று பிராட்டியை முன்னிலையாக்கித்
துதித்தான் என்று உரை கண்டனர் உளர். அவர் தேவி என்பதை அண்மை
விளியாக்கினர். மேற்பாட்டில் கூறினான் என்றமையால் இங்ஙனம் பொருள்
கொள்ள நேர்ந்தது போலும்.                                  (27)

5372.

‘இருளும் ஞாலம் இராவணனால்; இது
தெருளும், நீஇனிச் சில் பகல் தங்குறின்;
மருளும் மன்னவற்கு, யான் சொலும் வாசகம்
அருளுவாய்’ என்று,அடியின் இறைஞ்சினான்.

(அம்மையே)

     இராவணனால் -இராவணனாலே; இருளும் - இருண்டு கிடக்கின்ற;
இது ஞாலம் - இந்த உலகம் (உன்னால்); தெருளும் - தெளிவு பெறும்;
சில்பகல் - சில  முகூர்த்த நேரம்; தங்குறின் - யான் தாமதம் செய்தால்;
மருளும் - (அதனால்) (யாதாயிற்றோ என்று) மருட்சியடையும்; மன்னற்கு -
இராமபிரானுக்கு; யான் சொலும் வாசகம் - யான் கூறவேண்டிய பொன்
(பொருள்) பொதிந்த மொழியை; இனி - இப்போது; அருளுவாய் -
வழங்குவாயாக; என்று - என்று கூறி (அனுமன்); அடியின் இறைஞ்சினான் -
(பிராட்டியின்) திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.

     இராவணனால்இருண்ட ஞாலம் உன்னால் தெளிவு பெறும். சில்பகல்
தங்குதல் பிராட்டிக்கு ஏற்றிக் கூறினர் சிலர். அனுமன், யான் காலதாமதம்
செய்தால் பெருமான் மயங்கும் ஆதலின் விரைவில் செல்ல வேண்டும் என்று
பிராட்டியிடம் கூறுகின்றான். தங்குதல் என்ற சொல்லுக்கு காலதாமதம் செய்தல்
என்று பொருள். தரவு இடை தங்கல் ஓவிலன் (பொருநர் 173) தரல் இடத்துத்
தாழ்த்தல் இலன் என்றுமாம், என்னும் சார்புரையை நோக்குக.        (28)

அனுமனிடம் சீதைகூறியவை 

5373.

‘இன்னும்,ஈண்டு, ஒரு திங்கள் இருப்பல் யான்;
நின்னைநோக்கிப் பகர்ந்தது, நீதியோய் !
பின்னை ஆவிபிடிக்ககிலேன்; அந்த
மன்னன் ஆணை;இதனை மனக் கொள் நீ.