நீதியோய் -நீதியின் வடிவான அனுமனே; யான் - நான்; இன்னும் - மேலும்; ஈண்டு - இந்த இலங்கையில்; ஒரு திங்கள் இருப்பல் - ஒரு மாதம் பெருமான் வருகைக்காக உயிருடன் இருப்பேன்; பின்னை - அதற்குப் பின்பு (அவர் வரவில்லை எனின்); ஆவி பிடிக்ககிலேன் - என் உயிரை நிறுத்தி வைக்கும் ஆற்றல் உள்ளேன் அல்லேன்; அந்த மன்னன் ஆணை - அந்த அரசன் ஆணை; நின்னை நோக்கிப் பகர்ந்தது - உன் இயல்பைப் பார்த் துக்கூறப் பெற்றது; நீ - (அறிஞனாகிய) நீ; இதனை - இந்த மொழியை; மனத்துக்கொள் - மனத்தில் அமைத்துக் கொள்க. நீ நீதிமான்இராவணன்பால் ‘யாக்கை பேணி - நாண் இலாது இருந்தேன் அல்லேன்..... புண்ணிய மூர்த்தி தன்னைக் காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன்’ என்றும், ‘நின் தலைகள் சிந்தி வென்று நின்றருளும் கோலம் காணிய கிடந்த வேட்கை.... அழியும் ஆவி தீர்க்கும்’ (கம்ப. 7653,7654) என்றும் பேசியதை இங்கே நினைக்கவும். ஒரு செயலின், உறுதிப்பாட்டையும், உண்மையையும் வெளிப் படுத்த ஆணையிடுவது மரபு. அந்த ஆணை இறைவன் பெயராலும் மந்திரத்தின் பெயராலும் நிகழும். தீண்டு வீராயின் எம்மைத் திருநீலகண்டம்.... என்றும் ஆணை கேட்ட பெரியவர் என்றும் சேக்கிழார் குறிப்பர். (29) | 5374. | ‘ “ஆரம் தாழ் திரு மார்பற்கு அமைந்தது ஓர் தாரம்தான்அலளேனும், தயா எனும் ஈரம்தான் அகத்துஇல்லை என்றாலும், தன் வீரம் காத்தலைவேண்டு” என்று வேண்டுவாய். |
ஆரம் தாழ்திருமார்பற்கு - மாலை தங்கும்மார்புடைய இராம பிரானுக்கு; அமைந்தது ஓர் - ஏற்புடைத்தான; தாரம் அலனேனும் - மனைவியாக இல்லாவிடினும் (அதனால்); அகத்து - இராமபிரானின் உள்ளத்தில்; தயா எனும் ஈரம் இல்லை என்றாலும் - கருணை இல்லாமற் போனாலும்; தன் - தனக்கே உரித்தான; வீரம் காத்தலை - வீரத்தைப் பாதுகாக்கும் பண்பை; வேண்டு - நீ விரும்புவாயாக; என்று வேண்டுவாய் - என்று விண்ணப்பம் செய்வாயாக. ஆரம்தாழ் - மாலைதங்கிய. தாரம்தான் அலள் என்பதிலுள்ள தான் அசை ஈரம் - அன்பு. ஈரம் ஆவதும் இற்பிறப்பாவதும் (வாலி வதை) ஈரம் நீங்கிய சிற்றவை (நட்புக் கோள்) ஈரம் அளைஇ (குறள்) பிறர் துன்பம் நோக்கிக் கொள்ளும் பண்பு ஈரம். யான் தகாதவளாய் இருத்தலின் பெருமான் உள்ளத்தில் இருந்த ஈரம் உலர்ந்து போயிற்று. |