ஆனால் வீரம் கூடவாவற்றிப் போக வேண்டும் ஈரம் உலர்ந்தது போல் வீரம் உலராமல் காத்துக் கொள்ள வேண்டும் என்று பேசும் பிராட்டி மொழியில் வெறுப்பும் வெகுளியும் புலப்படுகிறது. பிராட்டி உலகப் பெண்கள் போலவே பேசுகிறாள். திருமார்பற்கு என்பதில் உள்ள நான்காம் உருபை ஏழன் உருபாக மாற்றி, திருமார்பின்பால் என்றும் பொருள் கூறலாம். இந்த ஏழன் உருபு வேண்டு என்னும் ஏவலில் நிறைவு பெறும். மார்பற்கு அமைந்தது ஓர் என்னும் சொற்பிணைப்பு அங்ஙனம் உரைகூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறது. (30) | 5375. | ‘ஏத்தும் வென்றி இளையவற்கு, ஈது ஒரு வார்த்தை கூறுதி;“மன் அருளால் எனைக் காத்து இருந்ததனக்கே கடன், இடை கோத்த வெஞ்சிறை வீடு” என்று கூறுவாய |
ஏத்தும் -யாவராலும்புகழப்படும்; வென்றி - வெற்றியை உடைய; இளையவற்கு - இலக்குவனுக்கு; ஈது ஒரு வார்த்தை - இந்த ஒரு மொழியை; கூறுதி - சொல்லுக; மன் அருளால் - இராமபிரானுடைய கட்டளையால்; எனை - என்னை; காத்திருந்ததனக்கே - பாதுகாத்திருந்த இளையவற்கு; கடன் - (இப்போதும் காப்பது) கடமை உள்ளது (ஆதலால்); இடை கோத்த - நடுவில் என்னைப் பிணித்த; வெஞ்சிறை - கொடிய சிறையிலிருந்து; வீடு - விடுவிக்க; என்று கூறுவாய் - என்று கூறுவாயாக. பிராட்டிசிந்தித்துச் சிந்தித்துப் பேசுகின்றாள். ஆதலால் பேச்சு இடை இடையே தடுமாறி வருகிறது. இலக்குவனை எண்ணும்போது அவன்பால்தான் கூறிய கடுஞ்சொற்கள் நினைவு வந்தது போலும். இளையவற்கு ஒரு வார்த்தை சொல்... இராமபிரான் கட்டளையால் பாதுகாத்தவற்குத் தான் கடமை உண்டு... இடையிலே என்னைப் பிணித்த சிறையிலிருந்து விடுவிப்பது என்று கூறுக என்ற தொடர் அமைப்பு அதனைக் காட்டும் (31) | 5376. | ‘ “திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால்; இங்குவந்திலனேஎனின், யாணர் நீர்க் கங்கையாற்றங்கரை, அடியேற்கும், தன் செங் கையால்கடன் செய்க” என்று செப்புவாய். |
திங்கள்ஒன்றில் - ஒருமாத காலஎல்லையில்; என் - என்னுடைய; செய்தவம் - செம்மையான தவம்; தீர்ந்ததால் - நிறைவேறுகிற படியால்; (அதற்குள்) (இராமபிரான்) இங்கு |