பக்கம் எண் :

440சுந்தர காண்டம்

வந்திலனே எனில் -இங்கவாராமற் போவானேயானால்; யாணர் நீர் -
அழகிய நீர்ப் பெருக்கை உடைய; கங்கையாற்றங்கரை - கங்கை நதியின்
கரையில்; அடியேற்கும் - அடியேனுக்கும்; தன் - தன்னுடைய; செங்கையால்
-
சிவந்த கரங்களால்; கடன் செய்க என்று - இறுதிச் சடங்கைச் செய்க
என்று; செப்புவாய் - சொல்வாயாக.

     ஒரு மாதஎல்லையில் தவம் நிறைவு பெறுகிறது. அதற்குள் வந்தால்
என்னைப் பார்க்கலாம். இல்லையேல் இறந்து படுவேன். அச்சடங்கு செய்ய
இங்கு வரவேண்டா. அதை அங்கே அருகில் உள்ள கங்கைக் கரையில் செய்க
என்று கூறுக என்று கூறுவதால் பிராட்டியின் மனநிலை புலப்படுகிறது.
செய்தவம் - செம்மையான தவம். ‘செய்திருவினைஉற’ (கம்ப. 2624) செய்யும்
தவம் என்று கூறினும் அமையும்.                             (32)

5377.

‘ “சிறக்கும் மாமியர் மூவர்க்கும், சீதை ஆண்டு
இறக்கின்றாள்தொழுதாள்” எனும் இன்ன சொல்,
அறத்தின்நாயகன்பால்; அருள் இன்மையால்
மறக்கும்ஆயினும்,நீ மறவேல், ஐயா !

     ஐயா - தந்தையே; சிறக்கும் - உயர்வடைகின்ற; மாமியர் மூவர்க்கும்
-
மூன்று மாமிகட்கும்; ஆண்டு - அந்த இலங்கையில்; இறக்கின்றாள் சீதை
-
இறக்கப் போகும் சீதை; தொழுதாள் - கைகூப்பி வணங்கினாள்; எனும் -
என்கின்ற; இன்ன சொல் - இந்த வார்த்தை; அறத்தின் நாயகன்பால் -
அறத்தின் தலைவனான இராமபிரான்பால்; அருள் இன்மையால் -
கருணையில்லாத காரணத்தால்; மறக்கும் ஆயினும் - (அவர்கள் பால் கூற)
மறந்து போயினும்; நீ மறவேல் - நீ மறந்து விடாதே.

     அறத்தின்நாயகன் எதிர்மறைத் தொனி. அறம் இல்லாதவன் என்பது
பொருள். இறக்கும் ஒருத்தி கூறிய மொழியை மறப்பவன் அறம் இல்லாதவன்
என்று கூறவேண்டுமோ. அவர்பால் அறம் உண்டு. அருள் இல்லை என்று
இராமனை விமர்சனம் செய்கின்றாள். இராமபிரான் தண்டகவனத்து
முனிவர்கள்பால் கூறிய மொழியை இங்கே எண்ணும் பிராட்டி இங்ஙனம் பேச
நேர்ந்தது.                                                (33)

5378.

‘வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்,
“இந்த, இப்பிறவிக்கு இரு மாதரைச்