பக்கம் எண் :

சூடாமணிப் படலம்445

(பிரிவாற்றாமையால்)தளர்ந்துள்ள இராமபிரான்; இன் உயிர் உய்வானாம் -
இனிய உயிர் தப்பி வாழ்வானாம்; போய் - காட்டை விட்டுச் சென்று; வான்
அந்நகர் புக்குஅன்றோ -
சிறந்த அயோத்தி நகர் புகுந்த பிறகல்லவா;
மௌலியும் வேய்வான் - முடிசூட்டிக் கொள்வான்; மெய்யன்றே - இவை
யாவும் நிகழக் கூடிய உண்மை யல்லவா.

     இப்பாடலில்கூறப்பட்ட உடன்பாடு யாவும் எதிர்மறைப் பொருளில்
வந்தவை. எடு்த்தல் ஓசையால் கூறி இதனுள் உள்ள எதிர்மறைப் பொருளை
அறிக. இப்பாடலின் நடை எதிர்மறைப் பொருள் தருவதற்கேற்ப
அமைந்துள்ளது. இராமபிரான், பதினான்கு வருடம் முடியுமுன் எந்த நகரிலும்
புகேன் என்று விரதம் எடுத்துக் கொண்டது பேசப் பெற்றது. போவான் என்ற
பாடமே சிறந்தது. இவ்விருத்தம் மா - விளம் - காய் என்னும் சீர்களைப்
பெற்று வரும். இத்தகைய பாடல்கள் இந்நூலில் 14 உள்ளன. எட்டு ஒன்பது
அளவியற் சந்தம் என்று கம்பன் அடிப்பொடி அவர்கள் குறிக்கின்றார்.  (40)

5385.

‘கைத்து ஓடும் சிறை, கற்போயை
வைத்தோன் இன்உயிர் வாழ்வானாம் !
பொய்த்தோர்வில்லிகள் போவாராம் !
இத்தோடு ஒப்பதுயாது உண்டே ?

     கற்போயை -கற்புவடிவமான உன்னை; கைத்து ஓடும் சிறை -
(கண்டவர்கள்) வெறுத்து ஓடும் சிறையில்; வைத்தோன் - சிறைவைத்த
இராவணன்; இன்னுயி்ர் வாழ்வானாம் - இனிய உயிருடன்
வாழ்ந்திருப்பானாம்; ஓர் வில்லிகள் - ஒப்பற்ற வில்லேந்திய
இராமலக்குவர்கள்; பொய்த்து - கடமையிலிருந்து தவறி; போவாராம் -
திரும்பிப் போய் விடுவார்களாம்; இத்தோடு ஒப்பது - இதனை ஒக்கும்
நிகழ்ச்சி; யாது உண்டு - யாது உள்ளது;

     சிறையின்கொடுமையால் எவரும் அதைக் கண்டால் வெறுத்து ஓடுவர்.
கற்பு, ஓயை எனப்பிரித்து கற்பின் நெறியில் உள்ள அன்னை என்று பொருள்
கொண்டு, என்னினிச் செய்வது எம் மோய் என்னும் பாடல் (கம்ப. 6034)
மேற்கோள் காட்டப்பட்டது. அங்கு ‘மோய்’ என்பதே சொல். ஒய் அன்று ‘உன்
மோயினி வருத்தமும்’ என்றே குலசேகரர் பேசுவார் (பெருமாள் 99)
பொய்த்தல் - தவறுதல், விண்நின்று பொய்ப்பின் - (குறள் 17) (அடை பதிப்பு)
இராமபிரான், அரக்கர்களை அழித்து, அறத்தை நிலைநாட்டுவேன் என்று
தண்டக வன முனிவர் பால் கூறியதைத் தவறிப் போகான் என்பது குறிப்பு.
கைத்து ஓடும் சிறை