பக்கம் எண் :

சூடாமணிப் படலம்449

மீண்டால் -திரும்பிச் சென்றால்; வீரம் - எங்களுடைய வீரமானது;
விளங்காதோ - விளக்கம் அடையாதா.

    சீதை இறந்துபட்டாள். இனிப் பகைவருடன் போராடுவதால் பயனில்லை
என்று திரும்பினால் எங்கள் வீரம் விளக்கம் அடையாதா என்று அனுமன்
கூறுவது அசதியாடலின் உச்சம். கொல்லாது திரும்பின் அகிம்சா வீரர்கள்
என்று இராமன் முதலானவர்களை உலகம் கொண்டாடும் என்று கூறுவதன்
மூலம் எது அகிம்சை, எது அகிம்சையல்ல என்பது விளக்கப்படுகிறது.
பூண்டாள் - புகழை ஆபரணமாக அணிந்தாள்; மாண்டாள், அதனால் புகழ்
பூண்டாள் என்க.                                            (46)

5391.

‘கெட்டேன்! நீ உயிர் கேதத்தால்
விட்டாய்என்றிடின், வெவ் அம்பால்,
ஒட்டாரோடு, உலகுஓர் ஏழும்
சுட்டாலும்,தொலையா அன்றோ ?

     கேதத்தால் -பிரிவாகிய துக்கத்தாலே; நீ உயிர் விட்டாய் என்றிடில்
-
நீ உயிரை விட்டாய் என்றால்; கெட்டேன் - யான் அழிந்தேன் (பிறகு);
வெவ்அம்பால் - கொடிய அம்பினாலே; ஒட்டாரோடு - பகைவர்களாகிய
அரக்கர்களுடன்; ஓர் ஏழு உலகும் - ஒப்பற்ற ஏழு உலகங்களையும்;
சுட்டாலும் - சுட்டு எரித்தாலும்; தொலையாது அன்றோ - பழி
நீங்காதல்லவா;

     கேதம் -துக்கம். ‘கேதம் கெடுத்து என்னை ஆண்டருளும்’ (திருவாசகம்
595) ஒட்டார் - பகைவர் கெட்டேன் - இரக்கத்தையும் அச்சத்தையும்
உணர்த்தும் சொல். இன்று, தொலைந்தேன், செத்தேன் என்று பேசப்படுவது
போன்றது.                                                 (47)

5392.

‘முன்னே, கொல்வான் மூஉலகும்,
பொன்னேபொங்கிய போர் வில்லான்,
என்னே ! நின்நிலை ஈது என்றால்,
பின்னே, செம்மைபிடிப்பானோ ?

     பொன்னே -திருமகளே!; முன்னே - (அரக்கரின் இயல்பு தெரிந்த)
அன்று; மூஉலகும் - மூன்று உலகங்களையும்; கொல்வான் - அழிக்கும்
பொருட்டு; பொங்கிய - சினந்து எழுந்த; போர்வில்லான் - போரில்வல்ல
வில்லேந்திய இராமபிரான்; நின்நிலை - உன்னுடைய நிலைமை; ஈது என்
றால்-
இப்படிப்பட்டது என்று