பக்கம் எண் :

சூடாமணிப் படலம்453

 

ஒளிக்கும் தேவர் உவந்து, உள்ளம்
களிக்கும் நல்வினை காணாயோ ?

     புளிக்கும் -(யாவரும்)வெறுப்படைகின்ற; கண்டகர் - முள்போலும்
அரக்கர்களின்; புண்ணீருள் - இரத்த வெள்ளத்தில்; குளிக்கும் பேய் -
நீராடும் பேய்கள் (அதனுள்); குடையும் தோறும் - முழுகும் போதெல்லாம்;
ஒளிக்கும் தேவர் -
(இக்காட்சியை) மறைவாயுள்ள தேவர்கள்; உள்ளம்
உவந்து -
மனம் மகிழ்ந்து; களிக்கும் - செருக்கடைகின்ற; நல்வினை -
நற்செயலை; காணாயோ - தோற்றுவிக்கமாட்டாயா.

     புளிக்கும் -வெறுப்பைத் தரும். ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
(குறுந் - 354) அடை - பதிப்பு. காண்டல் - உண்டாக்குதல். முனைவன்
கண்டது முதல் நூல் ஆகும். (தொல் - பொருள். 649) அடை - பதிப்பு.
குடைதல் - நீரில் மூழ்குதல். ‘குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே’...என்று
திருப்பாவை பேசும். குளித்தல் - நீராடுதல்.                     (53)

கலி விருத்தம்

5398.

‘ஊழியின் இறுதியின் உரும் எறிந்தென,
கேழ் கிளர் சுடுகணை கிழித்த புண் பொழி
தாழ் இருங்குருதியால், தரங்க வேலைகள்
ஏழும் ஒன்றாகநின்று, இரைப்பக் காண்டியால்.

     ஊழியின்இறுதியின் - யுகங்களி்ன் முடிவுக்காலத்திலே; உரும்
எறிந்தென -
இடிகள் தாக்கினாற் போல; கேழ்கிளர் - ஒளி விளங்கும்;
சுடுகணை -
வருத்துகின்ற அம்புகளால்; கிழித்த - கிழிக்கப் பெற்ற
(அரக்கர்களின் உடலில் உள்ள); புண்பொழி - புண்கள் சொரிகின்ற; தாழ்
இரும் -
மேலே இருந்து கீழே விழும் பெரிய; குருதியால் - இரத்த
அருவிகளால்; தரங்க வேலைகள் ஏழும் - அலைகளுடன் கூடிய ஏழு
கடல்களும்; நின்று இரைப்ப - இடைவிடாமல் ஒலிப்பதைக்; காண்டி -
காண்பாயாக.

     யுகாந்தகாலத்தில் இடிகள் மலைகளில் தாக்கும். அதுபோல
இராமபிரானின் அம்பு மலைபோன்ற அரக்கர்களைத் தாங்கும். அவருடம்பு
குருதி சொரியும். தாழ்தல் - மேலிருந்து விழுதல். பொங்கு அருவிதாழும் புனல்
வரை (நாலடி - 231) தாழ் என்பதற்கு ஆழம் என்று உரை கூறப் பெற்றது.
சொற் பொருத்தம் நன்று. மற்றவை ஆய்க. இவ் விருத்தம் விளம்-விளம்-மா-
கூவிளம் என்னும் சீர்களை முறையே பெற்று வரும். இத்தகு பாடல்கள்
இந்நூலில் 2177 உள்ளன.                                      (54)