நெடும் கழுது -பெரும் பேய். கடலில் குளிப்பவர்கள், உப்பு நீங்க நன்னீரில் நீராடுவது மரபு. பட்டினப்பாலை ‘தீது நீங்கக் கடலாடியும் மாசு போகப் புனல் படிந்தும்’ என்று பேசிற்று. (99.10) அங்கு இனியர் ‘மாசு’ என்பதற்கு உப்பு என்று பொருள் கூறினார். உப்பு நீங்க நன்னீரில் குளிப்பதைப் போல, பேய்களும் பறவைகளும் குருதிக் கறை நீங்க நன்னீரில் குளித்தன என்க. ஆல் - அசை. (56) | 5401. | ‘கரம் பயில் முரசுஇனம் கறங்க, கை தொடர் நரம்பு இயல்இமிழ் இசை நவில, நாடகம் அரம்பையர் ஆடியஅரங்கின், ஆண் தொழில் குரங்குகள் முறைமுறை குனிப்பக் காண்டியால். |
கரம் பயில் -கைகளால்முழக்கப்படும்; முரசு இனம் கறங்க - முரசும் அதன் இனமான வாத்தியங்களும் ஒலிக்க; கை தொடர் - கைகளால் இயக்கப்பெறும்; நரம்பு இயல் - (வீணை யாழ் முதலானவற்றில் உள்ள) நரம்புகள்இயன்ற; இமிழ் இசை நவில - ஒலிக்கும் இசையை ஒலிக்கவும்; அரம்பையர்- தேவ மகளிர்; நாடகம் ஆடிய அரங்கில் - நடனம் ஆடிய மேடைகளில்;ஆண் தொழில் குரங்குகள் - ஆண்மைத் தொழில் புரிந்த குரங்குகள்;முறைமுறை - வரிசை வரிசையாக; குனிப்ப - கூத்தாடுதலை; காண்டி -காண்பாயாக. நவிலுதல் -ஒலித்தல். இளம் நவில் அன்னம் (பம்பை வாவி8) குனித்தல் என்னும் தொழிற் பெயர் குனிப்ப என்று பெயரெச்ச வடிவில் உள்ளது. குனிப்ப என்பதற்குக் குனித்தலைச் செய்ய என்பதே பொருள். ‘திருமறு மார்ப நீ அருள வேண்டும்’ என்று பரிபாடல் பேசும் (பரிபாடல் 1-36) அருள வேண்டும் அதிகை வீரட்டனீரே என்று அப்பர் பேசுவார் (தேவா 26-4) அருளல் வேண்டும் என்பது அருள என உருக்கொண்டது. இதுவரை, அரக்கர்கள் மகிழ அரம்பையர் நாடகம் ஆடினர். இனி அரக்கர்கள் வருந்தக் குரங்குகள் நாடகம் ஆடும். என்றதனால் அரக்கர்களின் அழிவு உறுதி செய்யப்பெறுகிறது. (57) | 5402. | ‘புரை உறுபுன் தொழில் அரக்கர் புண் பொழி திரை உறு குருதியாறு ஈர்ப்பச் செல்வன, வரை உறு பிணப்பெரும் பிறக்கம் மண்டின, கரை உறு நெடுங்கடல் தூர்ப்பக் காண்டியால். |
புரை உறு -குற்றம்பொருந்திய; புண் தொழில் அரக்கர் - அற்பத் தொழிலை உடைய அரக்கர்களின்; புண் பொழி - புண்கள் |