பக்கம் எண் :

458சுந்தர காண்டம்

இராவணனின் தலைகளை;தடிந்து வவ்லி - களைந்து கைப்பற்றி; இடுவ -
போடுவதை; காண்டி - பார்ப்பாயாக.

     ஆல் - அசை.தோற்ற யானைகளின் பாதத்தில் வென்ற இராவணனின்
தலை விழும் என்றதுசெருக்கின் முடிவு இப்படித்தான் அமையும் என்று
குறிப்பித்தவாறு. திசையானைகளுள் வெண்மை முதலிய பிறநிறம் உடையனவும்
உளவேனும் பெரும்பான்மை பற்றி நீல் உறுதிசைக் கரி என்றார்
(அண்ணாமலை - பதி) இடுவ, தொழிற்பெயர்த்திரிபு. இடுதல் என்பதே
பொருள். பிறவாறு கூறி இடர்ப்பட வேண்டா. தொழிற் பெயர் எச்சமாய்
தோன்றல் மரபே (உரைச்சூத்திரம்)                               (61)

5406.

‘நீர்த்துஎழு கணை மழை வழங்க, நீல வான்
வேர்த்தது என்றுஇடை இடை வீசும் தூசுபோல்,
போர்த்து எழுபொலங் கொடி இலங்கை, பூழியோடு
ஆர்த்து எழு கழுதுஇரைத்து ஆடக் காண்டியால்.
 

     நீர்த்துஎழும் கணை - தன்மை உடையதாய் எழும் அம்புகளாகிய;
மழை வழங்க - மழையைப் பொழிய (அதை); நீலவான் - நீலநிறமுடைய
ஆகாயத்துக்கு; வேர்த்தது என்று - வியர்வை உண்டாயிற்று என்று; இடை
இடை -
இடை இடையே; வீசும் தூசு போல் - வீசுகின்ற ஆடையைப்
போல; போர்த்து எழு - நெருங்கி எழுந்துள்ள; பொலங்கொடி இலங்கை -
அழகிய கொடியைப் பெற்ற இலங்கையில்; பூழியோடு - புழுதியுடனே;
ஆர்த்து எழு கழுது - ஆரவாரித்து எழுகின்ற பேய்களை; இரைத்து -
கொக்கரித்து; ஆட - ஆடுவதை; காண்டி - பார்ப்பாயாக.

     ஆல் - அசை. பூழி- புழுதி. தூசு - ஆடை. மேக மண்டலம் வரை
உள்ள கொடி என்க. கொடியாடிய  இலங்கையில் பேயாடும் நிலை வரப்
போகிறது. என்றதால் இலங்கையின் அழிவு பேசப்படுகிறது என்க.      (62)

5407.

‘நீல் நிறஅரக்கர்தம் குருதி நீத்தம் நீர்
வேலை மிக்கு,ஆற்றொடு மீள, வேலை சூழ்
ஞாலம் முற்றுறுகடையுகத்து நச்சு அறாக்
காலனும்,வெறுத்து, உயிர் காலக் காண்டியால்.

     நீல்நிறம் -நீலநிறத்தைப் பெற்ற; அரக்கர் தம் - அரக்கர்களின்;
குருதி நீத்தம் - இரத்த வெள்ளம்; நீர் வேலை மிக்கு